Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

மிக ஆபத்தான சாலை விபத்தில் சிக்கிய இருவரின் ரத்தத்தில் etomidate கலந்திருந்தது: HSA

வாசிப்புநேரம் -
மிக ஆபத்தான சாலை விபத்தில் சிக்கிய இருவரின் ரத்தத்தில் etomidate கலந்திருந்தது: HSA

(படம்: Health Sciences Authority)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

பொங்கோலில் மரணத்தை ஏற்படுத்திய சாலை விபத்தில் சிக்கிய இருவரின் ரத்தத்தில் etomidate எனும் போதைப்பொருள் கலந்திருந்ததாக சுகாதார அறிவியல் ஆணையம் தெரிவித்துள்ளது.

விபத்துக்குப் பின் நடந்த விசாரணையில் காருக்குள் 42 மின்-சிகரெட்டுகளும் 1,200க்கும் மேல் மிச்-சிகரெட் குப்பிகளும் கண்டுபிடிக்கப்பட்டன என்று ஆணையம் கூறியது.

விரைவில் etomidate போதைப்பொருள் ஒழிப்புச் சட்டத்தின்கீழ் C ரக போதைப்பொருளாகச் சேர்க்கப்படவிருக்கிறது.

மே 13ஆம் தேதி தெம்பனீஸ் விரைவுச்சாலையில் சாலை விபத்து நேர்ந்தது. 30 வயது கார் ஓட்டுநர் பிழைத்தார். அவருடன் பயணம் செய்த 28 வயதுப் பெண் உயிரிழந்தார்.

விபத்து குறித்த விசாரணைக்கு உதவ ஓட்டுநர் காவல்துறை அதிகாரிகளுடனும் சுகாதார அறிவியல் ஆணையத்துடனும் ஒத்துழைக்கிறார்.

Etomidateஐ மருத்துவச் சூழ்நிலைகளில் மட்டும் பயன்படுத்த அனுமதி உள்ளது. எனினும் அதன் மருத்துவப் பயன்பாடு பல கடுமையான நிபந்தனைகளுக்கு உட்பட்டது.

அவற்றை இறக்குமதி செய்வதும் விற்பதும் சட்டப்படி குற்றம்.

அதற்கு அதிகபட்சமாக 10,000 வெள்ளி அபராதம், 6 மாதச் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

மீண்டும் மீண்டும் குற்றம் புரிபவர்களுக்கு இந்த அதிகபட்ச தண்டனை இரட்டிப்பாகும்.

Etomidate கொண்ட மின்-சிகரெட் குப்பிகளை வைத்திருந்தாலோ புகைத்தாலோ அதிகபட்சமாக 10,000 வெள்ளி அபராதம், 2 ஆண்டு சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்