Skip to main content
Caldecott பகுதியில் 1,600 புதிய வீடுகள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

Caldecott பகுதியில் 1,600 புதிய வீடுகள்

வாசிப்புநேரம் -
Caldecott பகுதியில் 1,600 புதிய வீடுகள்
(படம்: Ministry of National Development, Housing and Development Board)
கால்டிகாட் (Caldecott) MRT நிலையம் அருகே புதிய தேவைக்கு ஏற்பக் கட்டி விற்கப்படும் (BTO) வீடுகள் கட்டப்படவுள்ளன.

தோ பாயோ வெஸ்ட் (Toa Payoh West) வட்டாரத்தில் அது அமைந்துள்ளது.

வரும் அக்டோபரில் திட்டம் வெளியிடப்படவிருக்கிறது.

ஈரறை Flexi, நான்கறை, பொது வாடகை வீடுகள் என மொத்தம் 1,600 வீடுகள் அங்குக் கட்டப்படும்.

தோ பாயோவில் முதன்முறையாக மூத்தோருக்கு 240 சமூகப் பராமரிப்பு வீடுகள், புதிய துடிப்புடன் மூப்படையும் நிலையம் ஆகியவை கட்டப்படும்.

விரைவு உணவகம், உணவு நிலையம், பேரங்காடி, பிள்ளைப் பராமரிப்பு நிலையம், கடைகள் ஆகியவை கட்டப்படும் என்று வீடமைப்பு வளர்ச்சிக் கழகமும் தேசிய வளர்ச்சி அமைச்சும் தெரிவித்தன.

வீடுகளுக்கு அருகே சுமார் ஒரு ஹெக்டர் அளவிலான குடியிருப்புப் பூங்காவும் வருகிறது.
ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்