பெண் வேடமிட்டு மானபங்கம் செய்த முன்னாள் காவல் அதிகாரிக்குச் சிறை
வாசிப்புநேரம் -
(படம்: CNA/Wallace Woon)
பதின்ம வயதினரை மானபங்கம் செய்த முன்னாள் காவல்துறை அதிகாரிக்கு மூன்று ஆண்டுச் சிறைத் தண்டனையும் நான்கு பிரம்படிகளும் விதிக்கப்பட்டுள்ளன.
40 வயது ஷரிசால் ஷஃபீ (Sharizal Shafi'ee) பெண் வேடமிட்டு மூன்று சிறுவர்களை அணுகித் தமது உள்ளாடையைச் சரிசெய்ய உதவுமாறு கேட்டிருந்தார்.
முதல் இரண்டு சிறுவர்களும் மறுத்துவிட்டனர்.
ஷரிசாலுக்கு உண்மையில் உதவி தேவை என்று நம்பிய மூன்றாவது சிறுவன் உதவச் சம்மதித்தான்.
ஷரிசால் தம்மை மானபங்கப்படுத்தியதாக அந்த 15 வயதுச் சிறுவன் காவல்துறையிடம் புகார் செய்தான்.
குற்றங்கள் நடந்த நேரத்தில் ஷரிசால் காவல்துறை அதிகாரியாக இருந்தார்.
பதின்ம வயதினர் மூவருக்கும் எதிரான பாலியல் குற்றச்சாட்டுகளை ஷரிசால் ஒப்புக்கொண்டார்.
மேலும் பத்துக் குற்றச்சாட்டுகள் கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.
அந்தரங்கத்தைப் படம்பிடித்த குற்றச்சாட்டும் அவற்றில் அடங்கும்.
ஷரிசால் சிங்கப்பூர்க் காவல்துறையில் 17 ஆண்டுகள் பணியாற்றிப் பல விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றவர்.

ஆதாரம் : CNA