Executive கூட்டுரிமை வீடு - எப்போது, ஏன் கொண்டு வரப்பட்டது?
கோப்புப் படம்: AFP/Roslan Rahman
எக்ஸிகியூட்டிவ் (Executive) கூட்டுரிமை வீடுகள்
இவற்றை விற்பது, வாங்குவது ஆகியவற்றில் சில மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இத்தகைய வீடுகள் எப்போது, எதற்காகக் கட்டப்பட்டன என்று தெரியுமா?
1995-இல் அறிமுகமாகின.
அந்தக் காலக்கட்டத்தில் தனியார் வீட்டு விலை அதிகமாக இருந்தது.
வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடு வாங்கும் சக்தி நடுத்தர வருமானக் குடும்பங்களுக்கு இருந்தது.
ஆனால் அத்தகைய குடும்பங்களிடம் கூட்டுரிமை வீடு (Condominium) வாங்குவதற்குப் போதிய பணம் இல்லை.
அவர்களுக்குக் குறைந்த விலையில் தனியார் வீடுகளைக் கட்டித்தருவது திட்டத்தின் நோக்கம்.
முதல் திட்டம்
1996இல் பாசிர் ரிஸ்ஸில் (Pasir Ris) உள்ள ஈஸ்ட்வெல் (Eastvale). 312 வீடுகள் உள்ள குடியிருப்புக் கட்டடம்.
பொதுவாக இத்தகைய வீடுகளில் தனியார் வீடுகளைப் போல பாதுகாவலருடன் கம்பிக் கதவுகள் இருக்கும், நீச்சல் குளம், கேளிக்கைக் கூடம் ஆகியவையும் இருக்கும்.
எத்தனை வீடுகள் விற்கப்பட்டுள்ளன?
1996லிருந்து இன்று வரை சுமார் 67 எக்சிகியூட்டிவ் கூட்டுரிமை வீட்டுத் திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
35,000க்கும் அதிகமான வீடுகள் விற்கப்பட்டுள்ளன.
2005 முதல் 2010 வரை புதிய எக்சிகியூட்டிவ் கூட்டுரிமை வீட்டுத் திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.
2010க்குப் பிறகு திட்டம் புத்துயிர் பெற்றது.
வருமான வரம்பு?
தொடக்கத்தில் ஒரு குடும்பத்தின் மாத வருமானம் 8,000 வெள்ளிக்கும் மேல் இருந்தால் எக்சிகியூட்டிவ் கூட்டுரிமை வீடுகளை வாங்க முடியும்.
இப்போது அது 16,000 வெள்ளியாக உயர்த்தப்பட்டுள்ளது.