Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

COVID-19: வீட்டில் வேலை செய்து கொண்டே உடற்பயிற்சி செய்ய விரும்பும் மக்கள்

சிங்கப்பூரில் COVID-19 கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்தப் பொது இடங்களில் மக்கள் கூட்டத்தைக் குறைக்கப் பல நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் COVID-19 கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்தப் பொது இடங்களில் மக்கள் கூட்டத்தைக் குறைக்கப் பல நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

பாதுகாப்பு இடைவெளி காரணமாக சில உடற்பயிற்சி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

பெரும்பாலான நிறுவனங்கள், இயன்றவரை தங்கள் ஊழியர்கள் வீட்டிலிருந்தவாறே வேலைகளைச் செய்ய அனுமதித்துள்ளன.

அதனால் எப்படி மக்கள் தொடர்ந்து உடற்பயிற்சி செய்கிறார்கள் என்று "செய்தி" சிலரிடம் கேட்டது.

நாள் முழுக்க வீட்டில் இருப்பதால், சோம்பல் ஏற்படக்கூடாது என்பதற்காக சமூக வலைத்தளங்களில் நண்பர்கள் பெயரைக் குறிப்பிட்டு, அவர்கள் செய்யும் சில உடற்பயிற்சிக் காணொளிகளைப் பதிவு செய்யச் சொல்வேன்.

நண்பர்கள் அதைச் சவலாக ஏற்றுச் செய்து முடிப்பார்கள், பிறகு மீண்டும் என்னை செய்யச் சொல்வார்கள்.

உடற்பயிற்சி நிலையத்திற்கு செல்லாமல் வீட்டிலேயே சில பயிற்சிகள் செய்யலாம் 

கவித்தேஷ் குமார் பாலி (பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்)


வீட்டில் இருந்து வேலைக்குச் சென்று வர நான் MRT-யை பயன்படுத்துவேன். அதனால் தினமும் குறைந்தது நான்கு-ஐந்து கிலோமீட்டாரவது நடப்பேன் ஆனால் தற்போது வீட்டிலேயே வேலை செய்வதால் நடைப்பயிற்சிக்கு போதிய நேரம் இல்லை.

இருப்பினும் வீட்டில் உள்ள Tread Mill-இல் நடைப்பயிற்சி மேற்கொள்வேன், பிறகு அதை அலுவலக நண்பர்கள் இருக்கும் Whatsapp குழுவில் பதிவு செய்து அவர்களை ஓட ஊக்குவிப்பேன். 

- கௌதமன் (கணினிப் பொறியாளர்)


நான் பொதுவாக வேலையிடத்தில் உள்ள உடற்பயிற்சி நிலையத்தை பயன்படுத்துவது வழக்கம். ஆனால் தற்போதைய COVID-19 சூழ்நிலையால் அதைத்தொடர முடியவில்லை. அதனால் வீட்டில் இருக்கும் சில உடற்பயிற்சிக் கருவிகள் கொண்டு பயிற்சி செய்கின்றேன்.

அலுவலகத்தில் அடிக்கடி நடப்போம் ஆனால் வீட்டில் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருப்பதால் ஒரு மணி நேரத்திற்கு 10 நிமிடம் என்று ஒதுக்கி சிறு சிறு பயிற்சி செய்வேன்

- ஸ்ரீநிவாசன் (பொறியாளர்)

வீட்டில் இருக்கும் போது சிறுசிறு உடற்பயிற்சி செய்வது நல்லதுதான். ஆனால் ஒருவரின் உடல் வலிமை ஆரோக்கியம் பொருத்துத்தான் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.

சவால்களை விளையாட்டாக எண்ணி கடினமான பயிற்சிகளை செய்து காயங்கள் ஏற்படுத்தி கொள்ள வேண்டாம் அது ஆபத்தானது.

யோகா போன்றவற்றில் கூட தங்களால் என்ன பயிற்சி செய்ய இயலுமோ அதைச் செய்தால் போதும், அதற்கு மேல் செய்ய வேண்டாம் 

டாக்டர் கஸ்ஸாலி. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்