அமைச்சர்களின் சம்பளக் கட்டமைப்பு மாறுகிறது... என்ன புதிது?
வாசிப்புநேரம் -
படம்: CNA/Syamil Sapari
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
சிங்கப்பூரில் அமைச்சர்களின் சம்பள முறையில் MR1, MR2, MR3, MR4 என நான்கு நிலைகள் தற்போது உள்ளன.
(குறிப்பு: MR - Ministerial Rank)
இதில் MR4 என்பது அமைச்சர்களுக்கான தொடக்க நிலை.
அடுத்தபடியாக MR3, MR2 எனப் படிப்படியாக ஏற்றங்கண்டு MR1 என்ற உயர்வான சம்பள நிலையை எட்டுகிறது.
அமைச்சரின் அனுபவம், பொறுப்புகள், செயல்திறன் உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் அவர் எந்த நிலையில் இடம்பெறுவார் என்பதைப் பிரதமர் தீர்மானிக்கிறார்.
தற்போதுள்ள 16 அமைச்சர்களில் 10 பேர் MR4 நிலையில் உள்ளனர்.
எஞ்சிய ஆறு பேர் அதிக அனுபவம், கூடுதல் பொறுப்புகள் காரணமாக அதைவிட உயர்ந்த நிலைகளில் உள்ளனர்.
எந்த அமைச்சர் எந்த MR நிலையில் உள்ளார் என்ற தனிப்பட்ட விவரங்கள் வெளியிடப்படுவதில்லை.
2026 சம்பள மறுஆய்வு
15 ஆண்டுகளுக்குப் பிறகு அரசியல் பதவி வகிப்போரின் சம்பளக் கட்டமைப்பு மறுஆய்வு செய்யப்பட்டுள்ளது.
புதிய கட்டமைப்பின்படி MR4 அமைச்சருக்கான ஆண்டுச் சம்பளம் 1.1 மில்லியன் வெள்ளியிலிருந்து 1.8 மில்லியன் வெள்ளியாக மாற்றப்படுகிறது.
ஆனால் தற்போது பதவியில் உள்ள அமைச்சர்களின் சம்பளம் உடனடியாக 1.8 மில்லியன் வெள்ளியாக உயர்த்தப்படாது.
மாறாக அக்டோபர் 15 முதல் அதிகபட்சமாக 9 விழுக்காடு வரை ஒருமுறை சம்பள உயர்வு வழங்கப்படும்.
ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் உயர்வு அவர்களுடைய செயல்திறன், சம்பளம் கடைசியாக எப்போது மாற்றப்பட்டது உள்ளிட்ட அம்சங்களைப் பொறுத்திருக்கும்.
உதாரணமாகத் தற்போது ஆண்டுக்கு 1.1 மில்லியன் வெள்ளி பெறும் MR4 நிலை அமைச்சர் முழுமையான 9 விழுக்காட்டு உயர்வைப் பெற்றால் அவரது ஆண்டுச் சம்பளம் சுமார் 1.2 மில்லியன் வெள்ளியாக உயரும்.
சம்பளக் கட்டமைப்பை எளிமைப்படுத்தும் வகையில் MR2, MR3 நிலைகள் இணைக்கப்படவுள்ளன.
இதனால் எதிர்காலத்தில் நான்கு நிலைகளுக்குப் பதிலாக மூன்று நிலைகள் இருக்கும்.

ஆதாரம் : Mediacorp Seithi