Skip to main content
மோசமான வெயில்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர் exclusive

மோசமான வெயில்- சமாளிக்க?

வாசிப்புநேரம் -

"பருத்தி உடைகளை உடுத்துகிறேன்"

"அதிகத் தண்ணீர் குடிக்கிறேன்"

"தர்பூசணிப் பழம் சாப்பிடுகிறேன்"

"அடிக்கடி பழச்சாறுகள் குடிக்கிறேன்"

"கறுப்புக் கண்ணாடியைப் பயன்படுத்துகிறேன்"

இவை கொளுத்தும் வெயிலைச் சமாளிக்க பலரும் பின்பற்றும் வழிகள்.

சிங்கப்பூரில் வெயில் அந்த அளவுக்குக் கொளுத்துகிறது.

இது எதனால்?

ஆராய்ந்தது 'செய்தி'.

"இந்த வெப்பம் மாத இறுதி வரை நீடிக்கலாம். இடையில் மழை பெய்தாலும், காற்றில் ஈரப்பதம் குறையும்போது தோல் எரிச்சலை அதிகம் உணரலாம்"

என்று கூறுகிறார் சுற்றுப்புற ஆர்வலர் முனைவர் நா வெங்கட்ராமன்.

பொதுவாக ஏப்ரல், மே மாதங்கள் அதிக வெப்பமாக இருக்கும்.

ஜூன் மாதத்தில் வெப்பம் இருக்கும்; ஆனால் தென்மேற்குப் பருவமழை வந்து அதனைக் குறைத்துவிடும் என்றார் அவர்.

வெப்பம் அதிகரிக்கும்போது உடல் சோர்வு ஏற்படும் என எச்சரிக்கிறார் டாக்டர் முகமது பைசல்.

"சிலருக்கு இருமல், சளி இருக்கும். வேலைக்குச் சென்றுவிடலாம் என்று நினைப்பார்கள். ஆனால் நோய் காரணமாக உடலின் வெப்பநிலை மாறியிருக்கும்; அது வெளியிலுள்ள வெப்பநிலையுடன் சேரும்போது சோர்வு இன்னும் அதிகமாகும்" என்று அவர் விவரித்தார்.

உடல் சூடும் வெளி வெப்பமும் இணையும்போது:

✔️உடலின் செயலாக்கம் தடைபடும்
✔️உடல் உறுப்புகள் சரிவர இயங்கமாட்டா
✔️ரத்த அழுத்தம் குறையும்
✔️இதயத் துடிப்பு பாதிக்கும்
✔️மயக்கம் வரும்

உடலில் போதிய நீர்ச்சத்து இருக்கிறதா என்பதைச் சிறுநீரின் நிறத்தை வைத்தே அறியலாம் என்கிறார் டாக்டர் பைசல்.

"அது மஞ்சளாக இருந்தால் உடலில் நீர்ப் பற்றாக்குறை உள்ளது என்று அர்த்தம்; தெளிவாக இருந்தால் நீர்ச்சத்து போதுமானதாக இருப்பதாக அர்த்தம்"

என்றார் அவர்.

மேல் விவரங்கள் 'செய்தி' காணொளியில்...

ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்