Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

கரிம வெளியேற்றத்தைக் குறைக்க சிங்கப்பூரில் புதிய ஆய்வுக்கூடம் தொடங்கிய ExxonMobil

வாசிப்புநேரம் -
கரிம வெளியேற்றத்தைக் குறைக்க சிங்கப்பூரில் புதிய ஆய்வுக்கூடம் தொடங்கிய ExxonMobil

(படம்: Facebook/Nanyang Technological University, Singapore)

ExxonMobil நிறுவனம், கரிம வெளியேற்றத்தைக் குறைக்கப் புதிய நிறுவன ஆய்வுக்கூடத்தைத் தொடங்கியுள்ளது.

60 மில்லியன் வெள்ளிச் செலவில் அது உருவாக்கப்பட்டுள்ளது.

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்துடனும் A*STAR ஆய்வு அமைப்புடனும் நிறுவனம் சேர்ந்து பணியாற்றுகிறது.

சிங்கப்பூரில் பெரிய எரிசக்தி நிறுவனமொன்று முதன்முறை அத்தகைய முயற்சியில் ஈடுபடுகிறது.

அடுத்த ஐந்தாண்டுகளுக்குப் பல திட்டங்கள் வகுக்கப்படுகின்றன.

வெப்புவாயுக்களின் வெளியேற்றத்தைக் குறைப்பதிலும் செயல்திறனை மெருகூட்டுவதிலும் அவை கவனம் செலுத்தும்.

திட்டங்களில் 50க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள், விஞ்ஞானிகள், மாணவர்கள் பணியாற்றுவர்.

- மக்கிப்போகும் கழிவுகளை நிலையான விமான எரிபொருளாக மாற்றுவது

- கரியமில வாயுவை உறிஞ்சுவதற்குக் கடல்நீரைப் பயன்படுத்துவது

- மாற்றுக் கட்டுமானப் பொருள்களைத் தயாரிப்பது

முதலியவை அவற்றுள் சில.

ஆய்வுக்கூடத் தொடக்க நிகழ்ச்சியில் பேசிய துணைப் பிரதமர் ஹெங் சுவி கியெட் (Heng Swee Keat), எரிசக்தி உருமாற்றத்துக்கு ஆதரவளிக்க ஏதுவாகப் புதிய திட்டங்களை அமைக்கலாம் என்றார்.

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்