Skip to main content
2 வினாடிகளில் 4 சக்கரங்களை மாற்றவேண்டும்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

2 வினாடிகளில் 4 சக்கரங்களை மாற்றவேண்டும் - F1 இரவுக் கார்பந்தயம் - சில தகவல்கள்

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் Formula 1 இரவுக் கார்பந்தயம் இன்று தொடங்குகிறது.

ஞாயிற்றுக்கிழமை (5 அக்டோபர்) இறுதிப்போட்டி

போட்டியைப் பற்றி சில சுவாரஸ்யமான தகவல்கள்...

🏎️ Formula 1 கார் பந்தயம் முதன்முறையாக 1950ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்த ஆண்டு அதன் 75ஆம் ஆண்டுநிறைவு

🏎️ இவ்வாண்டு 21 நாடுகளில் மொத்தம் 24
கார்பந்தயங்கள் நடைபெறும்.

🏎️ 10 குழுக்களைச் சேர்ந்த 20 ஓட்டுநர்கள் பங்கேற்கின்றனர்.

🏎️ போட்டியின்போது பொதுவாக ஓட்டுநர்கள் 1,500 கலோரிகளைக் குறைப்பர். அவர்களது உடல் எடை 5% வரை குறையலாம்.

🏎️ வேக வளைவுகளில் செல்லும்போது ஓட்டுநர்கள் 5 மடங்கு அதிக உடல் எடை இருப்பதுபோல் உணர்வர்.

🏎️ போட்டிக்கு இடையே சக்கரங்களை மாற்றக் குழுவினரின் உதவி இன்றியமையாதது. 4 சக்கரங்களை 2 வினாடிகளில் மாற்றவேண்டும்.

🏎️ ஒரு பந்தயக் காரில் சுமார் 80,000 பாகங்கள் இருக்கும்.

🏎️ பந்தயக் கார்கள் அதிகபட்சம் மணிக்கு சுமார் 370 கிலோமீட்டர் வேகத்தில் பயணம் செய்யும்.

🏎️ லூயிஸ் ஹாமில்டன் (Lewis Hamilton), மைக்கேல் ஷூமேக்கர் (Michael Schumacher) ஆகிய இருவரும் ஆக அதிகமாக 7 முறை
உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளனர்.

இம்முறை சிங்கப்பூரில் யார் வெற்றி வாகை சூடுவார்? பொறுத்திருப்போம்!
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் வழங்கும் F1 கார்ப் பந்தயம் 2025ஐ அக்டோபர் 3 முதல் 5 வரை ஒளிவழி 5, MeWatchஇல் நேரடியாகக் காணலாம்
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்