Facebook ஆள்மாறாட்டம் - Meta நடவடிக்கை எடுக்க வேண்டும் - அரசாங்கம் உத்தரவு
வாசிப்புநேரம் -
கோப்புப்படம்: AP
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
Facebook தளத்தில் அரசாங்க அதிகாரி போல் ஆள்மாறாட்டம் செய்யும் மோசடிச் சம்பவங்களைக் கையாள நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் சிங்கப்பூர் அரசாங்கம் Meta நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
சிங்கப்பூரில் நடைபெறும் அனைத்துலக மோசடி எதிர்ப்பு மாநாட்டில் உள்துறைத் துணையமைச்சர் கோ பெய் மிங் (Goh Pei Ming) அதைத் தெரிவித்தார்.
மோசடி விளம்பரங்கள், கணக்குகள், வர்த்தகப் பக்கங்கள் ஆகியவற்றுக்கு எதிராக Meta நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
அரசாங்க அதிகாரி ஆள்மாறாட்ட மோசடிகள் ஆக அதிகமாக Facebook தளத்தில் நடப்பதால் Meta நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டதாகத் திரு கோ குறிப்பிட்டார்.
சென்ற ஆண்டைக் (2024) காட்டிலும் இந்த ஆண்டு முதல் பாதியில் அத்தகைய மோசடிகள் சுமார் 200 விழுக்காடு அதிகரித்தன.
அவற்றில் இழக்கப்பட்ட தொகையும் 90 விழுக்காடு உயர்ந்து 126 மில்லியன் வெள்ளியை எட்டியது.
Meta உத்தரவுக்கு இணங்கவில்லை என்றால் 1 மில்லியன் வெள்ளி வரை அபராதத்தை எதிர்நோக்கலாம்.

ஆதாரம் : CNA