Skip to main content
FairPrice கடைகளில் விலைச்சலுகைத் திட்டம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

FairPrice கடைகளில் விலைச்சலுகைத் திட்டம் - $2,000 மேல் சேமிக்கலாம்!

வாசிப்புநேரம் -
FairPrice கடைகளில் விலைச்சலுகைத் திட்டம் - $2,000 மேல் சேமிக்கலாம்!

(படம்: CNA/Gaya Chandramohan)

FairPrice கடைகளில் அத்தியாசியப் பொருள்களுக்கு விலைச்சலுகை கொடுக்கும் திட்டம் மீண்டும் தொடங்குகிறது.

FairPrice நிறுவனம் இன்று (13 ஜூன்) அது குறித்த அறிக்கையை வெளியிட்டது.

400க்கும் அதிகமான பொருள்களுக்குப் பற்றுச்சீட்டு மூலம் விலைச்சலுகை கிடைக்கும். பொது மக்கள் மொத்தம் 2,000 வெள்ளிக்கும் மேல் சேமிக்கலாம்.

Save Every Day இயக்கம் 2021இல் முதலில் அறிமுகமானது.

அன்றாடப் பொருள்கள் அனைவருக்கும் கிடைக்கச் செய்வதே அடிப்படை நோக்கம் என்று FairPrice நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி விபுல் சாவ்லா (Vipul Chawla) கூறினார்.

கடந்த ஆண்டு ஒன்றரை மில்லியன் பற்றுச்சீட்டுகளை மக்கள் பயன்படுத்தினர்.

இவ்வாண்டு இம்மாதம் முதல் செப்டம்பர் வரை பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்தலாம்.
 
ஆதாரம் : AGENCIES

மேலும் செய்திகள் கட்டுரைகள்