FairPrice கடைகளில் $100 செலவு செய்தால் $8 பற்றுச்சீட்டு
This audio is generated by an AI tool.
FairPrice கடைகளில் சீனப் புத்தாண்டை முன்னிட்டுச் சிறப்புப் பற்றுச்சீட்டு வழங்கப்படுகிறது.
100 வெள்ளி செலவு செய்தால் 8 வெள்ளி பற்றுச்சீட்டு கிடைக்கும்.
இந்தச் சிறப்புச் சலுகை இம்மாதம் 5ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை மட்டுமே.
FairPrice, FairPrice Finest, FairPrice Xtra ஆகிய கடைகளில் பற்றுச்சீட்டு வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் அதிகபட்சம் 4 பற்றுச்சீட்டுகள் வரை கிடைக்கும்.
அந்த 8 வெள்ளி பற்றுச்சீட்டைப் பயன்படுத்தக் குறைந்தபட்ச அளவு செலவு ஏதும் செய்யத் தேவையில்லை.
மார்ச் 3ஆம் தேதி வரை பற்றுச்சீட்டுகள் செல்லுபடியாகும்.
பற்றுச்சீட்டைப் பயன்படுத்திப் புகையிலைப் பொருள்கள், குழந்தைப் பால் மாவு, FairPrice பற்றுச்சீட்டு அட்டை, மருந்துச்சீட்டு தேவைப்படும் மருந்துகள் ஆகியவற்றை வாங்க முடியாது.