Skip to main content
FairPrice நடத்தும் தீபாவளி நிகழ்ச்சிகள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

FairPrice நடத்தும் தீபாவளி நிகழ்ச்சிகள்

வாசிப்புநேரம் -
FairPrice நடத்தும் தீபாவளி நிகழ்ச்சிகள்

(படம்: FairPrice Group)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

தீபாவளியை முன்னிட்டு FairPrice நிறுவனம் அக்கம்பக்க நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்கிறது.

மேற்கில் சுவா சூ காங்கில் ஒரு நிகழ்ச்சி.

கிழக்கில் பாசிர் ரிஸ் வட்டாரத்தில் ஒரு நிகழ்ச்சி.

நிகழ்ச்சிகள் இம்மாதம் 19ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறும்.

நிகழ்ச்சிகளில் பல்வேறு நடவடிக்கைகளை எதிர்பார்க்கலாம்.

அனைத்து வயதினருக்கும் ஏற்ற விளையாட்டுகளும் இடம்பெறும் என்று FairPrice குழுமம் தெரிவித்தது.

வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு அன்றாடத் தேவைக்கு ஏற்ற பொருள்கள் அடங்கிய பைகள் விநியோகிக்கப்படும்.

'A Full Plate’ என்ற சிங்கப்பூரின் மிகப் பெரிய நன்கொடை இயக்கத்துக்கும் பொதுமக்கள் ஆதரவளிக்கலாம். அத்திட்டம் தேவைப்படுவோருக்கு ஊட்டச்சத்துமிக்க உணவை வழங்கும் நோக்கத்தைக் கொண்டது.

Dhol Drum விழாக்காலப் படைப்பும் இடம்பெறும்.

உடல்நலம், மனநலம், சத்தான உணவு ஆகியவை பற்றி இலவச ஆலோசனைகள் வழங்கும் சுகாதார நிபுணர்களையும் சந்திக்கலாம்.

சுவைத்துப் பார்க்கப் பல உணவு வகைகளும் உண்டு என FairPrice குழுமம் தெரிவித்தது.

நிகழ்ச்சி குறித்த மேல் விவரங்கள்:

📍முதல் அங்கம்

நேரம்: காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை
இடம்: சுவா சூ காங் குழுத்தொகுதி (Choa Chu Kang GRC)
812B Choa Chu Kang Ave 7, Singapore 682812


📍இரண்டாவது அங்கம்

நேரம்: மாலை 4 மணி முதல் 6 மணி வரை
இடம்: பாசிர் ரிஸ் குழுத்தொகுதி (Pasir Ris- Punggol GRC)
528 Multi-Purpose Hall, Pasir Ris St 51, Singapore 512528
 
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்