வசதி குறைந்தோருக்கு $200,000 மதிப்புள்ள முட்டைகள் வழங்கப்பட்டுள்ளன: FairPrice குழுமம்
வாசிப்புநேரம் -
படம்: Facebook/NTUC FairPrice
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
FairPrice அறநிறுவனம் 25க்கும் அதிகமான அமைப்புகளோடு சேர்ந்து வசதி குறைந்த மக்களுக்குச் சத்துணவு வழங்கும் நடவடிக்கையில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
இவ்வாண்டு இதுவரை சுமார் 200,000 வெள்ளி மதிப்புள்ள முட்டைகளை வழங்கியிருப்பதாக FairPrice குழுமம் தெரிவித்தது.
சத்துணவின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவது அதன் நோக்கம்.
வசதி குறைந்த குடும்பங்கள், முதியோர், வெளிநாட்டு ஊழியர் ஆகியோருக்குத் தினசரி போதுமான புரதச் சத்து கிடைப்பதை உறுதிசெய்யும் திட்டத்தை மார்ச் மாதம் FairPrice அறநிறுவனம் அறிவித்தது.
அதன் மூலம் 46,000 குடும்பங்கள் பயன்பெறத் திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்காக FairPrice அறநிறுவனம் ஒரு மில்லியன் வெள்ளியை ஒதுக்கியிருக்கிறது.
இன்று அல்ஜூனிட் வட்டாரத்தில் மே தின நடவடிக்கையின் ஒரு பகுதியாகக் குடியிருப்பாளர்களுக்கு முட்டைகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் இலவச மருத்துவப் பரிசோதனையும் வழங்கப்பட்டது.

ஆதாரம் : Others