அத்தியாவசியப் பொருள்களின் விலை மாறாது: FairPrice
படம்: CNA
This audio is generated by an AI tool.
FairPrice பேரங்காடி அத்தியாவசியப் பொருள்களின் விலையை மாற்றாமல் வைத்திருக்கப் போவதாகக் கூறியிருக்கிறது.
நாளை முதல் அடுத்த மாதம் இறுதி வரை விலையில் மாற்றம் இல்லை என்று FairPrice தெரிவித்தது.
முட்டை, அரிசி, எண்ணெய் போன்ற 100 பொருள்களுக்கு விலையில் மாற்றம் இருக்காது.
FairPrice பேரங்காடிகளில் குறைந்த வருவாய்க் கொண்ட குடும்பங்கள் 90 விழுக்காடு என்னென்ன பொருள்களை வாங்குகின்றனர் என்ற அடிப்படையில் இந்தப் பொருள்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகக் குழுமம் சொன்னது.
FairPrice குழுமம் இவ்வளவு பெரிய அளவிலும் இவ்வளவு நீண்ட காலத்திற்கும் விலையை முடக்கி வைப்பது இதுவே முதன்முறை.
இதற்குமுன்னர் சீனப் புத்தாண்டுக்கு முந்தைய வாரங்களில் மட்டுமே இது போல் விலையேற்றம் நிறுத்தி வைக்கப்படுவது வழக்கம்.
CHAS ஆரஞ்சு, நீல அட்டை வைத்திருப்பவர்களுக்கு 6 காசு கட்டணக் கழிவு வழங்கப்படும்.
நிச்சயமற்ற பொருளாதாரச் சூழலில் சிங்கப்பூரர்களின் செலவைக் கட்டுப்படுத்த முயற்சி எடுக்கப்படுவதாக FairPrice குழுமம் தெரிவித்தது.