இன்று முதல் FairPrice வழங்கும் 'Save Every Day'
வாசிப்புநேரம் -
படம்: FairPrice Group
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
FairPrice குழுமத்தின் மிகப் பிரபலமான 'Save Everday' இயக்கம் மீண்டும் வந்துவிட்டது.
இம்முறை இயக்கத்தின் கீழ் 100 SG60 சிறப்புப் பற்றுச்சீட்டுகளும் வழங்கப்படுகின்றன. அந்தப் பற்றுச்சீட்டுகளை அன்றாடம் தேவைப்படும் அரிசி, எண்ணெய், பால் உள்ளிட்ட பொருள்களை வாங்கப் பயன்படுத்தலாம்.
பற்றுச்சீட்டுகள் இன்று முதல் செப்டம்பர் 10ஆம் தேதி வரை வழங்கப்படும் என்று FairPrice தெரிவித்தது.
அச்சிடப்பட்ட பற்றுச்சீட்டுகள் உள்ளன. FairPrice Group செயலி வாயிலாகப் பயன்படுத்தக்கூடிய பற்றுச்சீட்டுகளும் இருக்கின்றன. அவற்றை FairPrice, FairPrice Finest, FairPrice Xtra, Unity கடைகளில் பயன்படுத்தலாம்.
கடந்த ஆண்டு (2024) இந்த இயக்கத்தின் வழி 1.4 மில்லியன் வெள்ளியை வாடிக்கையாளர்கள் மிச்சப்படுத்த முடிந்தது.
2021ஆம் ஆண்டு இயக்கம் தொடங்கப்பட்டத்திலிருந்து அவ்வளவு பெரிய தொகை பதிவாகியிருப்பது அதுவே முதல் முறை.

ஆதாரம் : Others