Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

போலி வங்கி எண் மோசடி - அரை மில்லியன் டாலர் இழப்பு

வாசிப்புநேரம் -


கூகள் தேடல் அம்சத்தில் தென்படும் போலி வங்கி எண் மோசடி தொடர்பில் சுமார் அரை மில்லியன் டாலர் ஏமாற்றப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

கடந்த மாதத்திலிருந்து குறைந்தது 15 பேர் மோசடிக்கு ஆளாகியுள்ளதாகக் காவல்துறையினர் கூறினர்.

மோசடிக்காரர்கள் பொதுவாகக் கூகள் தேடல் அம்சத்தில் விளம்பரங்களைப் பதிவேற்றம் செய்வதுண்டு.

பொதுமக்கள் வங்கி எண்களைத் தேடும்போது அத்தகைய விளம்பரங்களைக் காண்பார்கள்.

விளம்பரங்களில் குறிப்பிடப்பட்ட போலி எண்களுக்கு அவர்கள் அழைப்பார்கள்.

வங்கி ஊழியர்களைப் போன்று பாவனை செய்யும் மோசடிக்காரர்கள் வங்கிக் கணக்குகளிலோ கடன்பற்று அட்டைகளிலோ கடன் தொகையிலோ சிக்கல் இருப்பதாகக் கூறுவார்கள்.

சிக்கல்களைத் தீர்ப்பதற்கு பணம் மாற்றிவிடும்படியும் மோசடிக்கார்கள் கேட்பார்கள்.

ஒரு சில மோசடிச் சம்பவங்களில் பொதுமக்களுக்கு வங்கியின் பெயரில் போலி குறுந்தகவல் அனுப்பப்படும் என்று குறிப்பிடப்பட்டது. 

'Let’s Fight Scam' எனும் மோசடிகளுக்கு எதிரான இயக்கத்தின் ஓர் அங்கமாக வங்கிக் கணக்குகள் புதுப்பிக்கப்படும் என்று கூறப்படுமென அதிகாரிகள் தெரிவித்தனர்.

கணக்கிலிருந்து பெருமளவில் பணம் மாற்றப்பட்டதைக் குறித்து வங்கி விசாரிக்கும்போது மட்டுமே தனிநபர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்வதாகக் கூறப்பட்டது.

எனவே வங்கி எண்களை அதிகாரபூர்வத் தளங்களில் உறுதிசெய்யும்படிப் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

- CNA/ac(gs)

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்