பிரதமர் வோங் கலந்துகொண்டது போன்ற போலி zoom காணொளி - $5 மில்லியன் இழந்த நபர்
(படம்: Singapore Police Force)
சிங்கப்பூர்க் காவல்துறை, பிரதமர் லாரன்ஸ் வோங் (Lawrence Wong) கலந்துகொண்டது போன்ற போலியான zoom காணொளிச் சந்திப்பின் படங்களைக் கைப்பற்றியிருக்கிறது.
செயற்கை நுண்ணறிவைக் கொண்டு உருவாக்கப்பட்ட அதுபோன்ற பொய்யான காணொளியை நம்பி ஒரு சிங்கப்பூரர் சுமார் 5 மில்லியன் வெள்ளியைப் பறிகொடுத்திருக்கிறார்.
ஹோர்முஸ் நீரிணை தொடர்பாக உதவி தேவைப்படுகிறது என்று அரசாங்கம் கேட்பதுபோல் அந்தக் காணொளிச் சந்திப்பு அமைக்கப்பட்டிருக்கிறது.
அதை நம்பி அவர் ஏமாந்து பணத்தை அனுப்பிவிட்டார்.
முதலில் WhatsApp மூலம் பிரதமரும் மூத்த அரசாங்கத் தலைவர்களும் கலந்துகொள்ளும் காணொளிச் சந்திப்புக்கு அழைப்பு வந்திருக்கிறது.
அதில் தனியார் துறையைச் சேர்ந்தவர் என்ற முறையில் வந்த அழைப்பை அவர் நம்பிவிட்டார்.
பிறகு மோசடிக்காரர்கள் அவரைத் தனிப்பட்ட முறையில் தொடர்புகொண்டு பணத்தை அனுப்பும்படி நம்ப வைத்துவிட்டனர்.