Skip to main content
யீஷூனில் சரிந்து விழுந்த மரம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

யீஷூனில் சரிந்து விழுந்த மரம் - இரு வீடுகள் பாதிப்பு

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

யீஷூன் ஸ்ட்ரீட் 22இல் உள்ள புளோக் 259க்கு அருகே மரம் ஒன்று சரிந்து விழுந்துள்ளது.

அது குறித்து நீ சூன் குழுத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜாக்சன் லாம் Facebookஇல் பதிவிட்டுள்ளார்.

"மரத்தை அகற்றுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. மரம் பலவீனமடைந்துள்ளது. அது சரிந்து விழுந்ததில் இரு வீடுகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. நல்லவேளை எவருக்கும் காயம் ஏற்படவில்லை," என்றார் திரு லாம்.

பாதிக்கப்பட்ட வீடுகளை நேரில் சென்று பார்த்ததாக அவர் சொன்னார்.

குடியிருப்பாளர்களின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு மரத்தை அகற்றுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் சொன்னார்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவு வழங்கப்படுவதாகவும் திரு லாம் உறுதியளித்தார்.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்