Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

காவல்துறையின் பெயரில் அனுப்பப்படும் போலிக் குறுந்தகவல்கள் - பொதுமக்களுக்கு எச்சரிக்கை

வாசிப்புநேரம் -

காவல்துறையின் பெயரில் அனுப்பப்படும் போலிக் குறுந்தகவல்கள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறுந்தகவல்களில் பொதுமக்களைப் பணம் அனுப்பும்படி கேட்கப்படும் என்று காவல்துறை அதிகாரிகள் கூறினர்.

கடன் மோசடி தொடர்பிலான ஒரு சம்பவத்தில் ஆடவர் தம்முடைய தனிப்பட்ட முகவரிகளையும் வங்கிக்கணக்கு விவரங்களையும் அனுப்பியிருக்கிறார்.

கடன் தொகையைப் பெறுவதற்குமுன் நிர்வாகக் கட்டணம் செலுத்தவேண்டும் என்றும் கூறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அப்போது 'SPF' எனும் பெயரில் அவருக்குப் போலிக் குறுந்தகவல் வந்தது.

ஆடவர் கள்ளப் பணத்தை நல்ல பணத்தை மாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டதன் தொடர்பில் சந்தேகிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

அது காவல்துறையால் அனுப்பப்பட்ட குறுந்தகவல் அல்லவென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தாங்கள் பெறும் குறுந்தகவல்கள் உண்மையா என்பதை அதிகாரிகளிடம் உறுதிசெய்துகொள்ளலாம் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்