சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
குடும்பங்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட திட்டங்கள்... "அதிகரிக்கும் செலவின் பாரத்தைக் குறைக்க அரசாங்க உதவிகள் ஓரளவு உதவும்"

(iStock)
குடும்பங்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இவ்வாண்டு வரவுசெலவுத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் சிலவற்றைப் பலர் வரவேற்கின்றனர்.
கடந்த ஈராண்டாக அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் அதிகரித்திருப்பதைச் சுட்டினார் திரு வாசு சுப்பிரமணியம்.
இரண்டு பிள்ளைகளுக்குத் தந்தையான அவர்
"அரசாங்கம் வழங்கும் மானியங்கள் குடும்பச் செலவுகளைச் சமாளிக்க உதவும்"
என்றார்.
சந்தைக்குச் சென்று பொருள்கள் வாங்கும்போதும், பிள்ளைகளுக்குப் பள்ளிப் பாடப் புத்தகங்கள் வாங்கும்போதும் மானியங்கள் அதிகரித்துள்ள செலவுகளின் பாரத்தைக் குறைக்க ஓரளவு உதவுவதை உணரமுடிகிறது என்றார் திரு சுப்பிரமணியம்.
குறிப்பாக நடுத்தர வருமானக் குடும்பங்களுக்கு அது உதவியாய் இருப்பதாகக் கூறுகிறார் அவர்.
அதுகுறித்து 'செய்தி' வீட்டு முகவர் லதா கண்ணனிடம் பேசியது.
"கழக வீடுகளை வாங்கக் காத்துக்கொண்டிருக்கும் புதிய தம்பதியருக்கு இவ்வாண்டின் வரவுசெலவுத் திட்டம் நற்செய்தியாக அமைகிறது"
என்கிறார் லதா கண்ணன்.
"வாழ்க்கைக்கு வீடுகளே அடித்தளம்"
கூடுதல் மானியங்கள் வழங்கும்போது மக்களால் வீடுகளை மேலும் எளிதில் வாங்க முடிகிறது என்று குறிப்பிட்டார் லதா.