Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

"வயதானாலும் திறனும் அழகும் குறையவே இல்லை..." - காற்பந்தாட்டப் புகழ் டேவிட் பெக்கமைச் சந்தித்த சிங்கப்பூரர்கள்

வாசிப்புநேரம் -

ஒருவர் தொலைக்காட்சியில் காணும் பிரபலங்கள் பல - அவர்களைச் சிங்கப்பூரில் சந்திக்க விரும்புவது பலருக்கும் நிறைவேறாத கனவாகவே உள்ளது. 

ஆனால் சிலருக்குக் கிட்டியது, அதிர்ஷ்டம்!

டேவிட் பெக்கம் (David Beckham) சென்ற வார இறுதியில்  சிங்கப்பூருக்கு வந்திருந்தார். அவரைச் சந்தித்த சிலரிடம் பேசியது 'செய்தி'! 

Manchester United காற்பந்து அணியின் ஆதரவாளர்களுக்கான Futsal விளையாட்டுக் குழு ஒன்றில் இருக்கிறேன்

அந்த விளையாட்டுக் குழுவில் இருக்கும் இருவருக்குத் திரு பெக்கமுடன் விளையாடும் வாய்ப்பு அளிக்கப்பட்டதாகக் கூறினார்  34 வயது ரூபன் காந்த். 

Adidas நிறுவனம் அந்த விளையாட்டு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. 

எதையும் எதிர்பார்க்காமல் என் நண்பரும் நானும் Kallang Cageக்குச் சென்றோம்... அங்கு அவர் இருந்தது நமக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது!

என்று பூரிப்புடன் சொன்னார் ரூபன். 

அவருடன் பல படங்கள் எடுத்தோம் - நாங்கள் அவரது தீவிர ரசிகர்கள் என்று அவரிடம் சொன்னேன்... வாய்ப்புக்கு நன்றி என்றும் தெரிவித்தேன்

என்றார் அவர்.

சிறு வயதிலிருந்தே நான் பெக்கமின் தீவிர ரசிகன்! அவரது சிகை அலங்காரத்தைப் போலவே நானும் அடிக்கடி செய்திருக்கிறேன்! 

என்று நினைவுகூர்ந்தார் ஃபேபியன் கில்பர்ட் டி சில்வா (Fabian Gilbert De Silva). 

அவரும் திரு பெக்கமுடன் சேர்ந்து விளையாடினார். 

வயதானாலும் அவரது திறன் சற்றும் குறையவில்லை!  அதைக் கண்டு அனைவரும் பாராட்டினர்

என்றார் அவர்.

திரு பெக்கமுடன் படமெடுக்கும்போது 7 கேமராக்கள் இருந்ததாக ஃபேபியன் சொன்னார். 

அவரிடம் சென்று, நிறைய கேமராக்கள் இருக்கின்றனவே, எதைக் கண்டு சிரிப்பீர்கள் என்று கேட்டேன்!

அவரும் பொதுவாக நடுவில் இருக்கும் கேமராவைத் தான் பார்ப்பேன் என்றார்!

என நகைச்சுவையாகச் சொன்னார் ஃபேபியன். 

பெக்கம் வார இறுதியில் சிங்கப்பூரில் இருப்பார் என்று  தெரிந்தவுடன், நான் அவரைக் காணத் திட்டமிட்டேன். சனிக்கிழமையன்று The Cageஇல் இடம்பெற்ற விளையாட்டைக் காணச் சென்றேன்

என்றார் திருவாட்டி அங்கயற்கண்ணி

அவரைக் காண்பது வாழ்க்கையில் மறக்கமுடியாத நிகழ்வு!

திரு பெக்கம் நேர்மையானவர். அவர் தன்னடக்கமும் பணிவும் நிறைந்தவர் என்று திருவாட்டி அங்கயற்கண்ணி வருணித்தார். 
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்