பிக்கல்பால் மைதானமாக உருமாறிய பேருந்து முனையம்!
வாசிப்புநேரம் -
ஃபேரர் பார்க்கிலுள்ள பேருந்து முனையம் பிக்கல்பால் மைதானமாக மாறியிருக்கிறது.
வரும் திங்கட்கிழமை (மார்ச் 16) அது திறக்கவிருக்கிறது.
முதன்முறையாகப் பேருந்து முனையம் ஒன்று இவ்வாறு மாற்றப்பட்டிருக்கிறது.
வாரந்தோறும் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை அங்கு பிக்கல்பால் விளையாடலாம். காலை 9 மணியிலிருந்து இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் அது பேருந்து முனையமாக இயங்கும். அதைத் தனியார் பேருந்து நிறுவனங்கள் பயன்படுத்தும். அத்தகைய பேருந்துகளில் பெரும்பாலும் வெளிநாட்டு ஊழியர்கள் பயணம் செய்வர்.
அண்மையில் பிக்கல்பால் மிகவும் பிரபலமாகியுள்ளது. ஆனால் அதன் தொடர்பில் புகார்களும் அதிகரித்திருக்கின்றன.
அதிகச் சத்தம் குறித்துப் பலர் புகார் செய்துள்ளனர். அதனால் சில இடங்களில் விளையாட்டு நேரம் கட்டுப்படுத்தப்பட்டது.
இருப்பினும் அது பிரபலமடைவதால் பிக்கல்பாலை விளையாடப் புதிய தளங்களையும் அரசாங்கம் உருவாக்குகிறது.
ஃபேரர் பார்க் பேருந்து முனையத்தில் விளையாட விரும்புவோர் MyActiveSG+ தளத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம்.
((தொடர்புடையவை:
1. https://seithi.mediacorp.sg/singapore/little-india-pickleball-court-823611
2. https://seithi.mediacorp.sg/singapore/pickleball-noiseless-balls-836536
3. https://seithi.mediacorp.sg/singapore/pickleball-ocbc-centre-823666))

ஆதாரம் : Mediacorp Seithi