Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

ஆசியக் கிண்ணக் காற்பந்துப் போட்டிக்குத் தகுதிபெற்ற சிங்கப்பூர் அணிக்கு $2 மில்லியன் சன்மானம்

வாசிப்புநேரம் -
ஆசியக் கிண்ணக் காற்பந்துப் போட்டிக்குத் தகுதிபெற்ற சிங்கப்பூர் அணிக்கு $2 மில்லியன் சன்மானம்
(படம்: CNA/Jeremy Long)
வெளியீடு : 19 Nov 2025 06:39PM புதுப்பிப்பு : 19 Nov 2025 07:57PM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

ஆசியக் கிண்ணக் காற்பந்துப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ள சிங்கப்பூர்த் தேசிய அணிக்கு 2 மில்லியன் வெள்ளி சன்மானம் வழங்கப்படவுள்ளது.

சிங்கப்பூர்க் காற்பந்துச் சங்கத்தின் தலைவர் ஃபோரஸ்ட் லீ (Forrest Li) அதனை அறிவித்தார்.

நேற்று ஹாங்காங்கிற்கு எதிரான தகுதிச்சுற்று ஆட்டத்தில் சிறப்பாக ஆடி 2-1 என்ற கோல் கணக்கில் சிங்கப்பூர்த் தேசிய அணி வென்றது.

அதைப் பாராட்டும் விதமாகச் சன்மானம் வழங்கப்படுகிறது என்று திரு லீ சொன்னார்.

"சிங்கப்பூரர்களுக்குப் பெருமிதத்தையும் மகிழ்ச்சியையும் பெற்றுத் தந்த நம் காற்பந்து வீரர்களே, உங்களுக்கு இந்தப் பரிசு நிச்சயம் தகும்," என்றார்.

இன்று சிங்கப்பூருக்குத் திரும்பிய தேசிய அணியை வரவேற்க 100-க்கும் அதிகமானோர் சாங்கி விமான நிலைய 2-ஆம் முனையத்தில் திரண்டனர்.

அவர்களைக் கண்ட பொதுமக்கள் ஆரவாரத்துடன் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

அணியின் தலைவர் ஹரிஸ் ஹருனுக்குப் (Hariss Harun) பிறந்தநாள் வாழ்த்துப் பாடலை அவர்கள் உற்சாகமாகப் பாடினர்.

பெரும் ஆதரவு தந்த ரசிகர்களுக்குத் திரு ஹரிஸ் நன்றி தெரிவித்தார்.

"பல சவால்களைத் தாண்டி நம்பிக்கையுடன் அணி ஆடியது. ஆதரவு தந்த சிங்கப்பூரர்களுக்காக வெற்றி பெறுவது எங்களுடைய முக்கிய இலக்காக இருந்தது என்றார் அவர்.
ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்