Skip to main content
"வேகமான இணையத் தொடர்பு சிங்கப்பூருக்குத் தேவை"
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர் exclusive

"வேகமான இணையத் தொடர்பு சிங்கப்பூருக்குத் தேவை"- ஏன்?

வாசிப்புநேரம் -
சிங்கப்பூர் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் (Artificial Intelligence) சார்ந்த துறைகளில் ஒரு பில்லியனுக்கும் அதிகமான தொகையை முதலீடு செய்யவுள்ளது.

முதலீடு அடுத்த 5 ஆண்டுகளுக்கு கட்டங்கட்டமாகச் செய்யப்படும் என்று வரவுசெலவுத் திட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

ஏன் இவ்வளவு முதலீடு?

AI என்றால் ChatGPT போன்றவை நமக்கு நினைவுக்கு வரும். ஆனால்...

"செயற்கைத் தொழில்நுட்பத்துக்கு எதிர்காலத்தில் பல்வேறு துறைகளை உருமாற்றும் ஆற்றல் உள்ளது,"

என்று இணையப் பாதுகாப்பு வல்லுநர் கணேஷ் நாராயணன் சொன்னார்.

பல்வேறு துறைகளில் தற்போதுள்ள செயல்முறைகளை அது கணிசமாக மாற்றலாம்.

"ChatGPT என்பது AIஇன் தொடக்கம் மட்டுமே. அறுவைச் சிகிச்சைகள், போக்குவரத்து, விமானத்துறை, வங்கித் துறை போன்றவற்றில் நொடிக்கு நொடி முடிவெடுப்பதற்கு இனி AI உதவலாம்," என்கிறார் திரு கணேஷ்.

AIக்கு விரைவான இணையத் தொடர்பு தேவையா?

சிங்கப்பூர் இணைய விரிவலைக் கட்டமைப்பின் (Broadband Network) வேகத்தை 2030க்குள் 10Gbpsக்கு அதிகரிக்க எண்ணுகிறது.

பெரும்பாலான வீடுகளில் தற்போதுள்ள இணைய விரிவலைக் கட்டமைப்பின் வேகத்தைப் போல் அது 10 மடங்கு.

"AI உலகின் பல்வேறு மேகக் கணிமைச் சேவைகளிலிருந்து (Cloud) தகவல்களைப் பெருமளவில் சேகரிக்கும்.

அதை ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் ஆராய்ந்து உத்திகளைக் கொண்டுவரும்.

அந்தத் திறனுக்கு இணைய விரிவலைக் கட்டமைப்பு வேகமாக இருக்கவேண்டும்," என்றார் திரு கணேஷ்.

குறிப்பாக அரசாங்கக் கட்டமைப்பில் அது அவசியமாக இருக்கலாம் என்றார் அவர்.

மேலும் செய்திகள் கட்டுரைகள்