Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஃபெலிசியா தியோ வழக்கு - குற்ற ஒப்புதல் வாக்குமூலம் ஒத்திவைப்பு

வாசிப்புநேரம் -

2007ஆம் ஆண்டு காணாமற்போன 19 வயதுப் பெண்ணின் மரணத்தின் தொடர்பிலான குற்றங்களை ஒப்புக்கொள்ளவிருந்த சந்தேக நபரின் வாக்குமூலம் ஒத்திவைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

அரசாங்கத் தரப்பும் தற்காப்புத் தரப்பும் பல்வேறு விவகாரங்களுக்கு முதலில் தீர்வு கண்டுபிடிக்க வேண்டியுள்ளது என்று தற்காப்புத் தரப்பு வழக்கறிஞர் சஷி நாதன் சொன்னார்.

இருதரப்பும் சில அம்சங்களில நேர் எதிர் நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதால் வழக்கின் விவரங்களை மறுஆய்வு செய்யவேண்டும் என்றார் அவர். 

விசாரணைக்கு முந்தைய சந்திப்பில் அது குறித்துப் பேசப்படும் என்று கூறப்பட்டது.

37 வயது அஹ்மது டேனியல் முகமது ராஃபா'ஈ (Ahmad Danial Mohamed Rafa’ee) மீதான கொலைக் குற்றச்சாட்டு அண்மையில் மீட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அவர் குற்றச்சாட்டிலிருந்து தற்காலிகமாக விடுதலை செய்யப்பட்டார்.

அஹ்மது மீது புதிதாக 6 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

குமாரி ஃபெலிசியா தியோவின்(Felicia Teo) மரணத்தை மறைத்தது தொடர்பானவை அவை. 

அஹ்மது டேனியலும் அவருக்கு உடந்தையாகச் செயல்பட்டதாக நம்பப்படும் இன்னொருவரும் 2007ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி, மரீன் டெரஸில் (Marine Terrace) உள்ள புளோக் 19இன் அடுக்குமாடி வீட்டில் குமாரி தியோவைக் கொலை செய்ததாக முன்னர் குற்றஞ்சாட்டப்பட்டது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்