Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர் trending

சாலையில் தவித்த முதியவர்... உதவிக்கரம் நீட்டிய மோட்டார்சைக்கிளோட்டி!

வாசிப்புநேரம் -
சாலையில் தவித்த முதியவர்... உதவிக்கரம் நீட்டிய மோட்டார்சைக்கிளோட்டி!

காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட படம்

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

வெளியீடு : 30 Oct 2026 05:06PM புதுப்பிப்பு : 04 Nov 2026 02:30AM

போக்குவரத்து விளக்குச் சந்திப்பில் மோட்டார்சைக்கிளை இயக்க முடியாமல் தவித்தார் ஒரு முதியவர்.

அவருக்கு உதவ முன்வந்தார் ஒரு மோட்டார்சைக்கிளோட்டி.

அந்தக் காணொளி சமூக ஊடகங்களில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

காணொளியில் முதியவர் தமது மோட்டார்சைக்கிளை இயக்க முயற்சி செய்கிறார்.

ஆனால் அது இயங்கவில்லை.

அதைத் தள்ளிச்செல்ல முயற்சி செய்கிறார்... அதுவும் முடியவில்லை.

அதைக் கவனித்த அந்த வழியே வந்த மோட்டார்சைக்கிளோட்டி உடனே உதவ முன்வருகிறார்.

போக்குவரத்து விளக்கு பச்சை நிறத்துக்கு மாறியதால் மற்ற வாகனமோட்டிகளிடம் சைகை மூலம் மன்னிப்புக் கேட்டார்.

பின்னர் மோட்டார்சைக்கிளைத் தள்ளிச்செல்கிறார்.

இந்தச் செயலைப் பார்த்த இணையவாசிகள் பலரும் மோட்டார் சைக்கிளோட்டியைப் பாராட்டியுள்ளனர்.

“உதவி செய்தவருக்கு மிக்க நன்றி. கடவுள் ஆசீர்வதிக்கட்டும்!” என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.

“அனைவரும் இவரைப்போல் உதவ முன்வர வேண்டும்” என்று மற்றொருவர் கூறியுள்ளார்.

ஆனால் இன்னும் சிலர் முதியவர் தலைக்கவசம் அணியாததைச் சுட்டிக்காட்டியுள்ளனர்.

“தலைக்கவசம் எங்கே?", “இது ஆபத்தானது!” என்று சிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, உதவ முன்வந்த மோட்டார்சைக்கிளோட்டியும் தமது வாகனத்தை முதலில் பாதுகாப்பாக நிறுத்தியிருக்க வேண்டும் என்று பின்னர் ஒப்புக்கொண்டார்.

அதனால் மற்ற வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுவதைத் தவிர்த்திருக்கலாம் என்று அவரே  கூறியுள்ளார்.

உதவிய மனப்பான்மையைப் பலர் பாராட்டினாலும் சாலைப் பாதுகாப்பின் முக்கியத்துவத்தையும் இணையவாசிகள் நினைவூட்டியுள்ளனர்.

ஆதாரம் : Social Media Local

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்