Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஆண் வேலையா? நாங்களும் செய்வோம்! - தேசத்திற்குச் சேவையாற்றுவதற்குப் பாலினம் முக்கியமில்லை என்று கூறும் பெண் காவல்துறை அதிகாரி

ஆர்ச்சர்ட் ரோடு போன்ற இடங்களுக்கு செல்லும்போது, குழுக்களில் அதிகாரிகள் சிலர் துப்பாக்கி ஏந்திக்கொண்டு சுற்றுக்காவலில் ஈடுபடுவதைக் கண்டதுண்டா?

வாசிப்புநேரம் -

#CelebratingSGWomen

ஆர்ச்சர்ட் ரோடு போன்ற இடங்களுக்கு செல்லும்போது, குழுக்களில் அதிகாரிகள் சிலர் துப்பாக்கி ஏந்திக்கொண்டு சுற்றுக்காவலில் ஈடுபடுவதைக் கண்டதுண்டா?

அவர்கள்தான் In-Situ Reaction Team (IRT) அதிகாரிகள், அதாவது சிங்கப்பூரில் ஏற்படக்கூடிய பொதுப் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் கையாளக்கூடிய முன்னணிக் குழுவினர்.

(படம்: SPF)

பணியில் இருக்கும்போது எது எப்போது எங்கு நடக்கும் என்று கணிக்கமுடியாது. அதிகாரிகள் எந்நேரத்திலும் தயார்நிலையில் இருக்கவேண்டும்.

பொதுவாகக் காவல்துறை அதிகாரிகள் ஆண்களாகவே சித்திரிக்கப்படும் வேளையில் அத்தகைய அதிரடியான பணியில் ஈடுபடுவோரில் ஒருவர் 32 வயது ஷாந்தினி ராஜேந்திரன் என்ற பெண் காவல்துறை அதிகாரி.

(படம்: SPF)

சிங்கப்பூர்ப் பெண்களைக் கொண்டாடும் இந்த ஆண்டு, ஆண்கள் அதிகம் பணிபுரிவதாகக் கருதப்படும் துறைகளில் கால் பதித்த பெண்களைச் சந்திக்கிறது, 'செய்தி'.

6 ஆண்டுகளாகக் காவல்துறையில் பணியாற்றிவரும் ஷாந்தினி,
தற்போது In-Situ Reaction Team (IRT) குழுவைச் செயல்படுத்த உதவுகிறார்.

சுற்றுக்காவல் பணியில் தோட்டா பாய முடியாத மேலாடை, தலைக்கவசம், துப்பாக்கி உட்பட சுமார் 17 கிலோகிராம் எடையை ஏந்தவேண்டியுள்ளது.

(படம்: SPF)

பயிற்சிக்காலத்தில் கனமான மேலாடையை அணிந்துகொண்டு, மேலும் இளமையான பலம்வாய்ந்த ஆண்கள் 10 பேருடன் ஓடவேண்டியிருந்தது. அது மிகவும் சிரமமாகவும், சவால் மிகுந்ததாகவும் இருந்தது.பெண்கள் என்ற முறையில் எங்களுக்கு விதிவிலக்கு வழங்கப்படவில்லை. இருப்பினும் பயிற்சியை முடிக்க முடிந்தது எனக்குத் தன்னம்பிக்கையை அதிகரித்தது,

என்று ஷாந்தினி சொன்னார்.

எனவே, பெண்களும் ஆண்களுக்கு இணையாகக் காவல்துறையில் பணியாற்றமுடியும் என்பது அவரது வலுவான நம்பிக்கை.

ஆண்கள் உடல்ரீதியாக வலுவானவர்கள். காவல்துறையுடன் ஒத்துழைக்காதவர்களைக் கையாளக்கூடியவர்கள். இருப்பினும், பெண்கள் அதிக அனுதாபம் கொண்டவர்கள் என்றும் மீள்திறன் கொண்டவர்கள் என்றும் நம்புகிறேன். காவல்துறையில் ஈடுபடுவதற்கு இது முக்கியமான சில பண்புகள்.

என்று ஷாந்தினி கூறினார்.

காவல்துறை அதிகாரியாகச் செயல்படுவதற்குப் பாலினம் முக்கியமில்லை என்றும் அவர் கூறுகிறார்.

அதிகாரிகள் அனைவருக்கும் ஒரே குறிக்கோள் - தேசத்திற்குச் சேவையாற்றுவது. பெண்ணாக இருந்தாலும் ஆணாக இருந்தாலும் அவர்களுக்குத் தனித்துவமான பண்புகள் உண்டு. அவர்கள் வெவ்வேறு வழிகளில் காவல்துறைக்குப் பங்களிக்கலாம்.

என்று ஷாந்தினி தெரிவித்தார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்