Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஆண் வேலையா? நாங்களும் செய்வோமே! - விலங்குப் பராமரிப்பில் ஆர்வம் கொண்ட மங்கை

பொதுவாக, விலங்குப் பராமரிப்பில் ஆண்களே அதிகம் பணிபுரிவர் என்ற எண்ணம் நம்மில் பலருக்கும் இருக்கும்.

வாசிப்புநேரம் -

#CelebratingSGWomen

பொதுவாக, விலங்குப் பராமரிப்பில் ஆண்களே அதிகம் பணிபுரிவர் என்ற எண்ணம் நம்மில் பலருக்கும் இருக்கும்.

அதற்குக் காரணம், கனமான பொருள்களைக் கையாள்வது, சுத்தம் செய்வது, விலங்குகளுக்குப் பயிற்சி அளிப்பது, சீற்றத்தை வெளிப்படுத்தும் விலங்குகளைக் கையாள்வது போன்ற சில கடுமையான வேலைப் பொறுப்புகள்.

இதை ஆண்கள் மட்டுமே செய்யக்கூடிய வேலை என்று ஒருபோதும் நினைத்ததில்லை,

என்கிறார் பறவைப் பராமரிப்பாளர், நாராயணி சிங்காரம்.

சிங்கப்பூர்ப் பெண்களைக் கொண்டாடும் இந்த ஆண்டு, ஆண்கள் அதிகம் பணிபுரிவதாகக் கருதப்படும் துறைகளில் கால் பதித்த பெண்களைச் சந்திக்கிறது, 'செய்தி'.

நாராயணி தற்போது, Bird Paradise-இன் Lorry Loft காட்சியகத்தின் வண்ணமயமான பறவைகளைப் பார்த்துக்கொள்கிறார்.

விலங்கியல்துறையில், பெண்களுக்கு நிச்சயம் இடம் உண்டு என்று அவர் ஆர்வத்துடன் விவரித்தார்.

நவீன விலங்குத் தோட்டங்களில், விலங்குகளோ, பறவைகளோ மூர்க்கமாக நடந்துகொண்டால், அவற்றைக் கூண்டில் அடைக்கவேண்டும் என்பதில்லை. அவை ஏன் அவ்வாறு நடந்துகொள்கின்றன, பின்னணியைக் கண்டறிந்து, நிலைமையைக் கையாள்வதுதான் அணுகுமுறை,

என்று நாராயணி கூறினார்.

அதுமட்டுமின்றி, பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் பயிற்சி அளிப்பதில், Positive Reinforcement, அதாவது ‘நற்செயல்களை ஊக்குவிக்கும் அணுகுமுறை பின்பற்றப்படுவதாக அவர் எடுத்துரைத்தார்.

எங்களுக்குப் பலம் போதாது..ஆனால் சிந்திக்கும் ஆற்றல் உண்டு..எதையும் செய்துவிடலாம்,

என்று நாராயணி நம்பிக்கையுடன் கூறுகிறார்.

வேலையில் சிரமங்கள் இல்லாமல் இல்லை.

இருப்பினும், விடாமுயற்சியுடன் செயல்பட்டால், வேலையில் திருப்தி கிடைக்கும் என்று இவர் நம்புகிறார்.

ஆர்வம் இருந்தால் போதும், மற்ற எதையும் பொருட்படுத்தத் தேவையில்லை,

என்பது நாராயணியின் உறுதியான நம்பிக்கை.

வண்ணமயமான இந்த மங்கையின் வாழ்க்கை....காணொளியில்! 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்