Skip to main content
"2022
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

"2022-2024 வரை 20க்கும் குறைவான பணிப்பெண்கள் மனநல உதவி நாடியுள்ளனர்"

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் பணிபுரியும் 20க்கும் குறைவான பணிப்பெண்கள் 2022இலிருந்து 2024ஆம் ஆண்டு வரை மனநல உதவியை நாடியிருப்பதாக மனிதவள அமைச்சுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் ஷான் ஹுவாங் (Shawn Huang) தெரிவித்துள்ளார்.

இதுபோன்று உதவியை நாடும்போது இல்லப்பணிப்பெண்கள் சட்டரீதியாக எந்தவொரு சிக்கலையும் எதிர்நோக்கியதாக மனிதவள அமைச்சுக்குத் தகவல் கிடைக்கவில்லை என்றார் அவர்.

வெளிநாட்டு ஊழியர் வேலை நியமனச் சட்டத்தின்கீழ் வேலை அனுமதி வைத்திருக்கும் அனைத்து வெளிநாட்டு ஊழியர்களுக்கும் ஆதரவு வழங்கப்படும்.

இல்லப் பணிப்பெண்கள் தங்களுக்குத் தேவைப்படும் மருத்துவச் சிகிச்சையைப் பெறத் தடுக்கும் முதலாளிகளுக்கு 10,000 வெள்ளி வரையிலான அபராதம், ஓராண்டு வரையிலான சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

எதிர்காலத்தில் அவர்கள் வெளிநாட்டு ஊழியர்களைப் பணியில் அமர்த்துவதற்குத் தடை விதிக்கப்படலாம்.
ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்