Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

அடுத்த 3 மாதங்களில் ஆட்களை வேலைக்கு எடுக்கத் திட்டமிடும் நிறுவனங்கள் குறைவு

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் உள்ளூர்வாசிகளை அல்லது வெளிநாட்டினரைப் பணியமர்த்தும் நிறுவனங்களின் விருப்பத்தில் தற்போது எந்த மற்றமும் இல்லை.

எனினும் மத்திய கிழக்கு நெருக்கடி, அதிகரிக்கும் செலவு ஆகியவற்றால் சில நிறுவனங்கள் வேலைக்கு ஆட்களை எடுப்பதில் அதிக எச்சரிக்கையாக உள்ளன.

மனிதவள அமைச்சர் டான் சீ லெங் (Tan See Leng) நாடாளுமன்றத்தில் அந்த விரவரங்களைத் தெரிவித்தார்.

சிங்கப்பூரர்களுக்கு நியாயமான வாய்ப்பு கிடைக்கவும், வெளிநாட்டு ஊழியர்கள் உள்ளூர் ஊழியர்களுக்குத் துணையாக இருக்கவும் வேலை அனுமதி விதிகள் உதவுகின்றன என்று அமைச்சர் கூறினார்.

இருப்பினும், அடுத்த மூன்று மாதங்களில் ஆட்களை வேலைக்கு எடுக்கத் திட்டமிட்டுள்ள நிறுவனங்களின் விகிதம் குறைந்துள்ளது என்றார்.

பிப்ரவரியில் 54.6 விழுக்காடாக இருந்த அந்த எண்ணிக்கை மார்ச்சில் சுமார் 10 விழுக்காடு குறைந்தது.
ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்