Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

சிங்கப்பூரில் குற்றச்செயல்கள் அதிகரிப்பு - கடைத் திருட்டு தொடர்ந்து கவலையளிக்கிறது

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில், குற்றச் செயல்களின் எண்ணிக்கை கூடிவருகிறது.

இந்த வருடத்தின் முதற்பாதியில் மட்டும் 10,000க்கும் அதிகமான குற்றச்செயல்கள் பதிவாயின.

அது, கடந்த ஆண்டின் முதல் 6 மாதங்களுடன் ஒப்பிடுகையில் சுமார் 5.5 விழுக்காடு அதிகம் என்று காவல்துறை குறிப்பிட்டது.

கடைத் திருட்டு, தொடர்ந்து கவலைக்குரிய குற்றச்செயலாக நீடிக்கிறது.

குற்றச் செயல்களில் அதன் பங்கு, கிட்டத்தட்ட 5இல் ஒரு பங்கு.

10இல் 7 கடைத் திருட்டுகள்...

பகுதிவாரிக் கடைகள், பேரங்காடிகள், சிறிய சில்லறை விற்பனைக் கடைகள் ஆகியவற்றில் நடைபெற்றன.

அதிகம் திருடப்பட்டவை?

உணவு பானங்கள், துணிமணிகள், அழகு சாதனப் பொருள்கள்.

இந்நிலையில், பாலியல் ரீதியான ஒழுங்கீன நடத்தை, மானபங்கம் உள்ளிட்ட குற்றச்செயல்களின் எண்ணிக்கையில் பெரிய மாற்றமில்லை.

குற்றச் செயல்களின் எண்ணிக்கை, கோவிட்டுக்கு முந்திய நிலையை எட்டியிருப்பது கவலையளிப்பதாகக் காவல்துறை தெரிவித்தது.

குற்றச்செயல்களைத் தவிர்ப்பதிலும் கண்டுபிடிப்பதிலும் சமூகப் பங்காளிகளின் உதவிக்கு அது வேண்டுகோள் விடுத்தது.

குறிப்பாக, கடைத் திருட்டுச் சம்பவங்களைத் தவிர்ப்பதில் சில்லறை வணிகர்களோடு இணைந்து அணுக்கமாய்ப் பணியாற்றப் போவதாகக் காவல்துறை குறிப்பிட்டது.
ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்