உலகக் கிண்ணக் காற்பந்து : 104 ஆட்டங்கள் $98 - மீடியாகார்ப் சந்தாத் திட்டம்
(படம்: FRANCK FIFE / AFP)
This audio is generated by an AI tool.
மீடியாகார்ப் (Mediacorp) உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளைக் காணப் புதிய சந்தாத் திட்டத்தை அறிவித்துள்ளது.
வரும் 30ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்வோருக்குக் கட்டணம் 98 வெள்ளி.
உலகக் கிண்ணக் காற்பந்தின் 104 போட்டிகளையும் நேரடியாகப் பார்க்கலாம்.
ஏப்ரலுக்குப் பிறகு சந்தாக் கட்டணம் 118 வெள்ளி.
2022 உலகக் கிண்ணப்போட்டிகளைக் காணவும் அதே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
அப்போது மொத்தம் 60 போட்டிகளே இடம்பெற்றன.
வரும் ஜூன் மாதம் 12ஆம் தேதி தொடங்கும் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி ஜூலை 20ஆம் தேதிவரை நீடிக்கும்.
கனடா, மெக்சிக்கோ அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளில் 48 குழுக்கள் போட்டியிடும்.
Singtel, StarHub ஆகியவற்றின்வழியாகவும் உலகக் கிண்ணப் போட்டிகளைக் காண ரசிகர்கள் பதிந்துகொள்ளலாம்.
தொலைகாட்சி, கைபேசி போன்றவற்றில் Mewatch வழியாக ஆட்டங்களைக் காணலாம்.