Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வசதி குறைந்த மாணவர்களுக்கு நிதியுதவி தரும் புதிய திட்டம்

வாசிப்புநேரம் -
வசதி குறைந்த மாணவர்களுக்கு நிதியுதவி தரும் புதிய திட்டம்

(படம்: Facebook/SUSS)

சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம் வசதி குறைந்த மாணவர்களுக்கு நிதியுதவி தரும் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. 

வசதி குறைந்த மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கான நாலாண்டுக் கல்விக் கட்டணத்தை வழங்குவது திட்டம்.

Quantedge அறநிறுவனம் அதற்கு நிதியாதரவு தருகிறது. 

அடுத்த ஆண்டு ஜூலை முதல் பல்கலைக்கழகத்தில் சேரும் புதிய மாணவர்களுக்குத் திட்டம் கைகொடுக்கும்.

Quantedge அறநிறுவனம் இரண்டரை மில்லியன் வெள்ளிக்கு மேல் வழங்குகிறது. 

அதிபர் ஹலிமா யாக்கோப் திட்டத்தின் அறிமுக நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

உதவி பெறும் மாணவர்கள் முழுநேரப் பட்டப்படிப்பை மேற்கொள்ள வேண்டும். அதோடு அது அவர்களுடைய முதல் பட்டப்படிப்பாக இருக்க வேண்டும். 

குடும்ப உறுப்பினர்களின் சராசரி தனிநபர் மாத வருமானம் 690 வெள்ளி அல்லது அதற்கும் குறைவாக இருக்கவேண்டும். 

உதவிநிதி பெறும் மாணவர்கள் நான்கறையைவிடப் பெரிய வீடு அல்லது தனியார் வீட்டில் வசிப்பவர்களாக இருக்கக்கூடாது.

நாலாண்டுக்கு மாணவர்களின் கல்விக் கட்டணம் முழுமையாகக் கட்டப்படும். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa