Skip to main content
அமைச்சர் ஜோசஃபின் தியோ பற்றிய போலித்தகவல்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

அமைச்சர் ஜோசஃபின் தியோ பற்றிய போலித்தகவல் - வலைப்பதிவாளருக்கு அபராதம்

வாசிப்புநேரம் -
தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் தியோ பற்றி போலித்தகவல் பகிர்ந்த
வலைப்பதிவாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

திருமதி தியோ மலாய் சமூகத்தினர் குறித்து அவதுறான கருத்துகளைத் தெரிவித்ததாக 57 வயதான மன்மீட் சிங் பஹதார் சிங் (Manmeet Singh Bahadar Singh) TikTok காணொளி ஒன்றில் கூறினார்.

அவர் அறிமுகமில்லாத நபர் அனுப்பிய தகவலைச் சரிபார்க்காமல் காணொளியில் பகிர்ந்தார்.

அது தவறான தகவல் என்று அறிந்ததும் காணொளியைச் சிங் அகற்றிவிட்டதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.

வெவ்வேறு இனத்தைச் சேர்ந்தவர்களிடையே சச்சரவை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டதாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டைச் சிங் ஒப்புக்கொண்டார்.

அவருக்கு 6,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.

சமூக அரசியல் பதிவுகளைப் பகிரும் வலைப்பதிவாளரான சிங், இதற்கு முன்பு முன்னாள் அதிபர் தேர்தல் வேட்பாளர் திரு டான் கின் லியனின் (Tan Kin Lian) பாதுகாவலராய்ப் பணியாற்றினார்.
ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்