Skip to main content
ஹவ்காங்கில் HDB வெற்றுத்தளத்தில் தீ
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

ஹவ்காங்கில் HDB வெற்றுத்தளத்தில் தீ - மூவர் மருத்துவமனையில்

வாசிப்புநேரம் -
ஹவ்காங்கில் HDB வெற்றுத்தளத்தில் தீ - மூவர் மருத்துவமனையில்
படம்: Facebook/SG Daily Update
வெளியீடு : 17 Feb 2026 02:30PM புதுப்பிப்பு : 17 Feb 2026 06:28PM
ஹவ்காங்கில் (Hougang) வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் (HDB) வெற்றுத்தளத்தில் நேற்று தீப்பற்றியது.

புளோக் 418, ஹவ்காங் அவன்யூ 8இல் (Block 418, Hougang Avenue 8) மதியம் 12.30 மணியளவில் தீச்சம்பவம் நடந்தது.

Gondola எனும் தொங்கு மேடையும் கட்டுமானப் பொருள்களும் தீப்பற்றியதாக Facebook பதிவொன்று காட்டுகிறது.

தீ உடனடியாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதால் அது மேல்தளத்திலுள்ள வீடுகளுக்குப் பரவவில்லை.

ஆனாலும் புகையைச் சுவாசித்த குடியிருப்பாளர்களில் சிலருக்குச் சிகிச்சை தேவைப்பட்டது. அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

நிலைமையைச் சோதிக்க சம்பவ இடத்துக்கு அதிகாரிகள் அனுப்பப்படுவர் என்று அல்ஜூனிட்-ஹவ்காங் நகரமன்றம் (Aljunied-Hougang Town Council) கூறியது.

தீப்பிடித்த தொங்கு மேடையை நகரமன்றத்தின் குத்தகையாளர் பயன்படுத்தியதாக 8World ஊடகம் கூறியது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
 
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்