Skip to main content
தெம்பனிஸில் தீ
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

தெம்பனிஸில் தீ

வாசிப்புநேரம் -
தெம்பனிஸில் தீ

படம்: CNA/Calvin Oh, Facebook/SCDF

தெம்பனிஸில் உள்ள 2 மாடித் தொழில்துறைக் கட்டடத்தில் தீ மூண்டதை அடுத்து அதை அணைக்கும் முயற்சிகள் தொடர்கின்றன.

18 தெம்பனிஸ் ஸ்டிரீட் 92-இல் ஏற்பட்ட தீச்சம்பவம் குறித்துப் பிற்பகல் 12.50க்கு தகவல் கிடைத்ததாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

தீயை அணைக்க 5 தண்ணீர்க் கருவிகளைப் பயன்படுத்தி வருவதாகவும் அது சொன்னது.

TC Homeplus நிறுவனத்தின் சன்னலிலிருந்து புகை வெளியாவது குடிமைத் தற்காப்புப் படை Facebook பக்கத்தில் பகிர்ந்த படங்களில் தெரிந்தது.

பகிரப்பட்ட மற்ற படங்களிலும் காணொளிகளிலும் பாதிக்கப்பட்ட இடத்திலிருந்து கரும்புகை வெளியாவது தெரிந்தது.

சம்பவ இடம் SAFRA தெம்பனிஸுக்கு அருகே உள்ளது.

சீமெய் ஸ்டிரீட் 3இல் உள்ள சாங்கி பொது மருத்துவமனையிலிருந்தும் தெம்பனிஸ் அவென்யூ 1இல் உள்ள தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரியிலிருந்தும் கரும்புகையைப் பார்க்க முடிந்ததாக CNA குறிப்பிட்டது.
படம்: CNA/Calvin Oh
படம்: CNA/Lim Li Ting
படம்: CNA/Lim Li Ting
படம்: Caroline Bone
ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்