துவாஸ் ஊழியர் தங்கும் விடுதியில் தீ
வாசிப்புநேரம் -
(படம்: Facebook/Singapore Civil Defence Force)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
துவாஸ் ஊழியர் தங்கும் விடுதி ஒன்றில் தீ மூண்டதைத் தொடர்ந்து 8 பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
துவாஸ் அவென்யூ 8ல் உள்ள விடுதியின் 2ஆம் மாடியில் தீ மூண்டது.
நேற்று (8 ஜூலை) காலை 11.40 மணியளவில் விபத்து குறித்து தகவல் கிடைத்ததாகச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
2ஆவது மாடியில் அறையின் நுழைவாயிலில் வைக்கப்பட்டிருந்த பொருள்கள் தீயில் சம்பந்தப்பட்டிருந்தன.
தண்ணீரைப் பீய்ச்சி அடித்துத் தீயை அணைத்ததாகக் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
தீச்சம்பவத்தால் 8 பேர் புகையைச் சுவாசித்தனர்.
அவர்களில் இருவருக்கு லேசான தீக்காயங்கள் ஏற்பட்டன.
அவர்கள் அனைவரும் சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
தீ ஏற்பட்டதற்கான காரணம் விசாரிக்கப்பட்டு வருகிறது.

ஆதாரம் : Mediacorp Seithi