Skip to main content
'தீயை அணைக்கும் பணி தொடர்கிறது'
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

'தீயை அணைக்கும் பணி தொடர்கிறது' - சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட கப்பல் கேரளா அருகே தீப்பிடித்த சம்பவம்

வாசிப்புநேரம் -
இந்தியாவின் கேரள மாநிலத்தில் தீப்பிடித்த, சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட கப்பலில் தீயை அணைக்கும் பணி தொடர்வதாக சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையம் கூறியிருக்கிறது.

Wan Hai 503 என்ற அந்தக் கப்பல் இந்தியப் பெருங்கடலுக்கு அப்பால் நேற்று தீப்பிடித்தது.

இந்திய அதிகாரிகள் தீயை அணைக்க மேலும் இரண்டு கப்பல்களை அனுப்பியுள்ளனர்.

கப்பலின் உரிமையாளர் நிறுவனம் இன்று பின்னேரம் தீப்பற்றி எரியும் கப்பல் இருக்கும் இடத்துக்குச் செல்லவிருக்கிறது.

கப்பலிலிருந்து காப்பாற்றப்பட்ட 18 பேரும் புதிய மங்களூர் துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

காயமடைந்த 6 பேர் கடற்கரை அருகே உள்ள ஒரு மருத்துமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

காணாமற்போன நால்வரைத் தேடும் பணி தொடர்கிறது. தேடல் மீட்புக் குழுவினரோடு ஆகாயக் கண்காணிப்புப் பிரிவினரும் அவர்களைத் தேடுகின்றனர்.

தீயைக் கட்டுக்குள் கொண்டுவரத் தேவையான தொழில்நுட்பத் தகவல்களை சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையம் வழங்கிவருகிறது.

ஆணையம் நிலைமையை அணுக்கமாகக் கண்காணித்துவருவதாய்ச் சொன்னது.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்