Skip to main content
ரோவெல் ரோடு உணவகத்தில் தீ
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

ரோவெல் ரோடு உணவகத்தில் தீ

வாசிப்புநேரம் -
ரோவெல் ரோடு உணவகத்தில் தீ
காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட படம்: TikTok/@sujanroy4203
வெளியீடு : 19 Feb 2026 06:39PM புதுப்பிப்பு : 19 Feb 2026 08:17PM
ரோவெல் ரோட்டில் (Rowell Road) அமைந்துள்ள கானா பாஸ்மதி (Khana Basmati) உணவகத்தில் தீ மூண்டது.

அதைக் காட்டும் காணொளிகள் TikTok தளத்தில் பகிரப்பட்டன.

தீயணைப்பாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பணியைத் தொடங்குவது காணொளிகளில் தெரிந்தது.

சம்பவம் குறித்து மீடியாகார்ப் 'செய்தி' சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையிடம் கேட்டது.

1 ரோவெல் ரோட்டில் அமைந்திருக்கும் உணவகத்தில் தீ மூண்டதாகப் பிற்பகல் 1.25 மணிக்குத் தகவல் கிடைத்ததாக அது சொன்னது.

உணவகத்தின் சமையலறையில் உள்ள பொருள்களால் தீ ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.

தீயணைப்பாளர்கள் தண்ணீரைக்கொண்டு தீயை அணைத்தனர்.

யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

தீக்கான காரணம் விசாரிக்கப்படுகிறது.
ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்