கோவன் வீட்டில் தீ - உதவிக்காக அலறிய குடியிருப்பாளர்கள்
வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் 6 கோவன் ரைஸில் (Kovan Rise) இருக்கும் கூட்டுரிமை வீட்டில் தீ மூண்டது.
சம்பவம் குறித்துப் பின்னிரவு சுமார் 2.30 மணிக்குத் தகவல் கிடைத்ததாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
கட்டடத்தின் 14ஆவது மாடியிலிருந்து அலறல் சத்தம் கேட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
புகை சூழ்ந்த 2 மாடி வீட்டிற்குள் தீயணைப்பாளர்கள் உடனே நுழைந்தனர்.
வீட்டிற்குள் 6 பேர் இருந்ததாகக் கூறப்பட்டது.
நால்வர் முதல் மாடியிலும் இருவர் இரண்டாம் மாடியிலும் இருந்தனர்.
அவர்களில் மூவர் அதிகப் புகையை சுவாசித்ததால் சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
ஒருவருக்கும் தீக்காயமும் ஏற்பட்டிருந்தது.
குடிமைத் தற்காப்பு படை சம்பவ இடத்திற்குச் செல்வதற்கு முன்பே சுமார் 100 குடியிருப்பாளர்கள் கட்டடத்தைவிட்டு வெளியேறியதாகத் தெரிகிறது.
விசாரணை தொடர்கிறது.

ஆதாரம் : Mediacorp Seithi