Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர் exclusive

தீமிதித் திருவிழா: புகைமூட்டத்தைக் கருத்தில்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பரிசீலனை

வாசிப்புநேரம் -
தீமிதித் திருவிழா: புகைமூட்டத்தைக் கருத்தில்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பரிசீலனை
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

வெளியீடு : 16 Oct 2026 11:10PM புதுப்பிப்பு : 16 Oct 2026 11:14PM
சிங்கப்பூரில் நிலவும் புகைமூட்டத்தைக் கருத்தில்கொண்டு, சௌத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரியம்மன் கோயிலின் தீமிதித் திருவிழாவுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பரிசீலிக்கப்படுகின்றன.

கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சும் இந்து அறக்கட்டளை வாரியமும் கோயில் நிர்வாகத்துடன் தொடர்பில் உள்ளன.

தீமிதித் திருவிழாவுக்கு இன்னும் சுமார் இரண்டு வாரங்கள் உள்ளன.

அதுவரை புகைமூட்ட நிலவரத்தையும் காற்றின் தரத்தையும் அணுக்கமாகக் கண்காணிப்பதாக அமைச்சு தெரிவித்தது.

திருவிழாவில் கலந்துகொள்வோர் முகக்கவசம் அணிவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

பக்தர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யத் தேவைப்பட்டால் செய்யவேண்டிய மாற்று ஏற்பாடுகள் குறித்தும் கோயில் நிர்வாகத்துடன் கலந்துபேசப்படுகிறது.

பக்தர்கள் தங்கள் சமயக் கடமைகளைப் பாதுகாப்பாக நிறைவேற்றுவதே நோக்கம் என்று அமைச்சு கூறியது.

இதற்கிடையே, தேசியச் சுற்றுப்புற அமைப்பின் ஆலோசனைகளைப் பின்பற்றுமாறு சமய அமைப்புகளுக்கு அமைச்சு நினைவூட்டியுள்ளது.

குறிப்பாக, வெளிப்புற நடவடிக்கைகளின்போது அந்த ஆலோசனைகளைக் கவனத்தில்கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

தீமிதித் திருவிழா நெருங்கும்போது அப்போதைய நிலவரத்துக்கு ஏற்ப ஏற்பாடுகள் குறித்த கூடுதல் விவரங்களைக் கோயில் நிர்வாகம் வெளியிடும்.
ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்