Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் முதல்முறையாகப் புற்றுநோயின் இறுதிக்கட்டத்தில் இருந்தவருக்குக் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் முதல்முறையாகப் புற்றுநோயின் இறுதிக்கட்டத்தில் இருந்தவருக்குக் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை

(கோப்புப் படம்: AP Photo/Patrick Semansky)

சிங்கப்பூரில் முதல்முறையாகப் பெருங்குடல் புற்றுநோயின் இறுதிக்கட்டத்தில் இருந்தவருக்குக் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்தகைய நடைமுறையின் மூலம் நோயாளியின் ஆயுளைக் குறைந்தது 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க இயலும்.

61 வயது திருவாட்டி லிம்மிற்குப் பெருங்குடல் புற்றுநோய் இருப்பது சில ஆண்டிற்கு முன் கண்டுபிடிக்கப்பட்டது.

புற்றுநோயின் இறுதிக்கட்டத்தில் திருவாட்டி லிம்மின் மலக்குடல் அகற்றப்பட்டது.

எனினும் புற்றுநோய் அவரது கல்லீரலில் மிகவேகமாய்ப் பரவத்தொடங்கியது.

வேறு வழியின்றிக் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்தாகவேண்டிய நிலை.

தாய்க்குத் தமது கல்லீரலின் ஒருபகுதியைத் தானமாய்க் கொடுத்தார் 22 வயது கோ.

ஈராண்டுக்குப் பிறகு புற்றுநோயிலிருந்து முழுமையாய்க் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளார் திருவாட்டி லிம்.

தம்மால் உருவான உயிர், இன்று தமக்கு உயிர் கொடுத்துள்ளதாய் நெகிழ்ந்தார் திருவாட்டி லிம்.

சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகச் சுகாதாரப் பிரிவைச் சேர்ந்த 50க்கும் அதிகமான நிபுணர்கள் திருவாட்டி லிம்மைப் பரிசோதித்தனர். 

அதன் பிறகு அவருக்கான சிகிச்சை முறைகள், அறுவை சிகிச்சைக்குப் பிந்திய பராமரிப்பு முதலியன முடிவுசெய்யப்பட்டன.

திருவாட்டி லிம்மின் சிகிச்சை வெற்றிகரமாய் அமைந்தாலும் அனைவருக்கும் இது பொருந்தாது.

சுகாதாரப் பிரிவின் மதிப்பீட்டின்படி, நோயால் பாதிக்கப்பட்டுள்ள 8 முதல் 12 விழுக்காட்டினருக்கே இந்தச் சிகிச்சை பலனளிக்கும் என்று கூறப்படுகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்