Skip to main content
சரணடையும் முதன்முறை போதைப்பொருள் குற்றவாளிகள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

சரணடையும் முதன்முறை போதைப்பொருள் குற்றவாளிகள் - மறுவாழ்வு நிலையம் செல்லத் தேவையில்லை

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் முதல்முறையாகப் போதைப்பொருள் குற்றம் புரிந்து சரணடைவோர் மறுவாழ்வு நிலையங்களுக்கு அனுப்பப்படமாட்டார்கள் என்று சட்ட அமைச்சர் எட்வின் தோங் (Edwin Tong) தெரிவித்துள்ளார்.

மேற்பார்வையுடன் கூடிய கண்காணிப்பு நிலையங்களுக்கு அவர்கள் அனுப்பப்படுவார்கள்.

இது நாளை நடப்புக்கு வருகிறது.

போதைப்பொருள் பயன்படுத்துவோர் முன்கூட்டியாக உதவி நாடுவதை ஊக்குவிக்கும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

சிங்கப்பூரில் சென்ற ஆண்டு போதைப்பொருள் தொடர்பான மரணங்கள் 15 விழுக்காடு அதிகரித்தன.

உயிரிழந்தவர்களில் ஏறத்தாழ மூவரில் ஒருவருக்குப் போதைப்பொருள் புழக்கம் இருந்தது இதற்குமுன் கண்டறியப்படாதது தெரியவந்துள்ளது.

போதைப்பொருளால் பாதிக்கப்பட்டோரை நினைவுகூரும் வருடாந்திர நிகழ்ச்சியில் இதுகுறித்த விவரம் வெளியிடப்பட்டது.

கடந்த மூன்றாண்டுகளில் கைதுசெய்யப்பட்ட புதிய போதைப்புழங்கிகளில் பாதிக்கு மேற்பட்டோர் 30 வயதுக்குட்பட்டவர்கள்.

20 வயதுக்குட்பட்டவர்கள் தொடர்பான சம்பவங்கள் கடந்த ஆண்டு 20 விழுக்காட்டுக்குமேல் கூடின.

போதைப்பொருளால் பாதிக்கப்பட்டோரை நினைவுகூரும் இயக்கம் இந்த ஆண்டு போதைப்பொருள் நினைப்பதைக் காட்டிலும் எத்தகைய தாக்கத்தைக் கொண்டது என்பதில் கவனம் செலுத்துகிறது.


 
ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்