Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூர் துறைமுகத்தில் நிலவரம் என்ன? இனி துல்லியமாகக் காணலாம்

வாசிப்புநேரம் -

கடல்துறை, துறைமுக ஆணையம்  சிங்கப்பூர் துறைமுகத்தின் மெய்நிகர் மாதிரியை வெளியிட்டுள்ளது. 

'The Maritime Digital Twin' என்பது அந்தத் தளத்தின் பெயர்.

'Real time' அதாவது நிகழ்நேரத்தில் அது இயங்குகிறது.

கடலடியைப் பார்க்கலாம்

தளத்தில் கடலடியை முப்பரிமாண முறையில் பார்க்கலாம்.

கடலடி நடவடிக்கைகள்,குறிப்பாக நீரில் அமிழ்ந்திருக்கும் பகுதியில் கப்பல்களில் வளரும் பாசி போன்றவற்றை அகற்றும் நடவடிக்கையைத் திட்டமிட அது உதவும்.

கப்பல்களின் விவரத்தை அறியலாம்

கப்பல்களின் அடையாளக் குறிப்புகள், அவை அடுத்து செல்லவிருக்கும் இடம், பயண விவரங்கள் முதலிய விவரங்களையும் தளத்தில் பெறமுடியும்.

சேவை வழங்குபவர்கள் நேரத்தை மிச்சப்படுத்த  சிறந்த பயணப்பாதையைத் தேர்தெடுக்கவும் அது உதவும். 

மின்னிலக்கக் கப்பல்களுக்குப் போதுமான சக்தி உள்ளதா என்பதைக் கண்காணிப்பதோடு,  உடனடியாக மின்னூட்டப்படவேண்டிய கப்பல்களுக்கு அருகில் உள்ள நிலையம் பற்றிய விவரமும் கண்டுபிடித்துக் கொடுக்கப்படும்.

வானிலை முன்னுரைப்பும் வழங்கப்படுவதால், கால தாமதங்களைத் தவிர்க்க தளம் உதவும்.

துறைமுகத்தின் செயல்திறன், பாதுகாப்பு, நம்பகத்தன்மை  ஆகியவற்றை தளம் வலுப்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.

ஆதாரம் : Mediacorp Seithi

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்