Skip to main content
பிடிபடாமல் மீன் பிடிப்பது எப்படி?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

பிடிபடாமல் மீன் பிடிப்பது எப்படி?

வாசிப்புநேரம் -
பிடிபடாமல் மீன் பிடிப்பது எப்படி?

(படம்: Lydia Lam)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

வெளியீடு : 19 Oct 2026 01:17PM புதுப்பிப்பு : 19 Oct 2026 07:44PM

மரினா பே வட்டாரத்தில் இரண்டு இளையர்கள் மீன் பிடிக்கும் காட்சி அண்மையில் இணையத்தில் வெளியானது.

அவர்கள் அனுமதிக்கப்படாத இடத்தில் மீன் பிடித்ததால் சர்ச்சை எழுந்தது.

சிங்கப்பூரில் மெக்ரிட்ச்சி நீர்த்தேக்கத்தில் (MacRitchie Reservoir), ரோச்சோர் கால்வாய் (Rochor Canal) உள்ளிட்ட 15 இடங்களில் மீன் பிடிக்க அனுமதிக்கப்படுகிறது.

சட்டத்தை மீறினால் என்ன தண்டனை?

அனுமதிக்கப்படாத இடத்தில் மீன்பிடிப்போருக்குத் தண்டனை விதிக்கப்படும்.

முதல் முறை குற்றம் புரிந்தால் எச்சரிக்கைக் கடிதம் அனுப்பப்படலாம் அல்லது அபராதம் விதிக்கப்படலாம்.

மீண்டும் குற்றம் புரிவோர் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படலாம். அவர்களுக்கு 3,000 வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படலாம்.

கட்டுப்பாடு உள்ள இடங்களுக்குள் நுழைபவர்களுக்கும் அதிகபட்சம் 3,000 வெள்ளி அபராதம் பொருந்தும்.

மீன் பிடிப்போர் எவற்றைக் கருத்தில்கொள்ளவேண்டும்?

🐟 மீன் பிடிக்கச் செயற்கை இரையை மட்டுமே பயன்படுத்தவேண்டும்.

🐟 மீன் பிடிக்கும் இடத்தைச் சுத்தமாக வைத்திருக்கவேண்டும்.

🐟  மற்றவர்களுக்குக் காயம் ஏற்படுத்தாமல் கவனமாகத் தூண்டிலை வீசவேண்டும்.

🐟 பாதசாரிகளுக்கு வழிவிடவேண்டும்.

🐟 முடிந்தவரை பிடித்த மீன்களை மீண்டும் நீரில் விடுவிக்கலாம்.

ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்