மானபங்கம் செய்த சந்தேகத்தில் 5 ஆடவர்கள் கைது
வாசிப்புநேரம் -

மானபங்கம் செய்த சந்தேகத்தில் கைதான 5 ஆடவர்கள் மீது நாளை (16 ஜனவரி) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும்.
அவர்கள் 29 வயதிற்கும் 47 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் என்று காவல்துறை தெரிவித்தது.
அந்த மானபங்கச் சம்பவங்களில் 19 வயதிற்கும் 27 வயதிற்கும் இடைப்பட்ட 3 பெண்களும் 30, 31 வயது நிரம்பிய 2 ஆடவர்களும் பாதிக்கப்பட்டனர்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் கைதான ஐவருக்கும் அதிகபட்சமாக 3 ஆண்டுச் சிறை, அபராதம், பிரம்படி அல்லது இவற்றில் எந்த இரு தண்டனைகளும் விதிக்கபடலாம்.
காவல்துறை மானபங்கச் சம்பவங்களைத் தடுக்கக் கேளிக்கைக் கூடங்கள், பொதுப் போக்குவரத்து நிறுவனங்கள், சமூகத்தினர் என அனைவருடனும் தொடர்ந்து பணியாற்றவிருப்பதாகத் தெரிவித்துள்ளது.

ஆதாரம் : Others