Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

உணவுத்துறையில் மின்னிலக்கப் பயன்பாட்டை ஊக்குவிக்க முயற்சி

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரின் உணவுத் தொழில்துறை, பெரிய அளவிலான உருமாற்றத்தைத் தொடங்கியுள்ள வேளையில் அதில் மின்னிலக்கப் பயன்பாட்டை ஊக்குவிக்க அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறது. 

மின்னிலக்கத்தின் பலன்களை எடுத்துக்கூற சிலருக்குப் பயிற்சியளிக்கப்படும். 

அதே நேரத்தில் தரவுப் பகுப்பாய்வு, உணவுத் தொழில்நுட்பம் ஆகியவற்றைப் பயன்படுத்த நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படும்.   

புத்தாக்கத்தை வளர்ப்பதும் உள்ளூர்த் திறனாளர்களை உருவாக்குவதும் மனிதவளத்தைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதும் நோக்கம். 

உணவுத் தொழில்துறையின் வருங்கால வெற்றிக்கு மின்னிலக்கமயமே திறவுகோல் என்று கருதப்படுகிறது. 

வாடிக்கையாளர்கள் இணையம் வழியாக உணவு வாங்குவதற்கான உத்திகளை விரிவுபடுத்துவது ஒரு வழி.

அது ஊழியர்களின் வேலைப்பளுவைக் குறைப்பதோடு வாடிக்கையாளர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப உணவுப் பட்டியலை மாற்றியமைக்கவும் உதவும் என்று கூறப்படுகிறது.

மின்னிலக்கச் சந்தைப்படுத்துதல், தரவுப் பகுப்பாய்வு போன்ற புதிய வேலைகளும் திறன்களும் உருவாகியிருப்பதை வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங் (Gan Kim Yong)  சுட்டினார். 

திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம் உள்ளூர் மக்களை அந்த வேலைகளுக்குத் தயார்ப்படுத்த அரசாங்கம் உணவுச் சேவை நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றும் என்றார் அவர். 

Enterprise Singapore அமைப்பின் உணவுச் சேவைகள் தொழில்துறைக்கான உருமாற்றத் திட்டத்தின் ஒரு பகுதி அது. 

ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்