Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

உணவு தொடர்பான மோசடிச் சம்பவங்கள்... அவை என்ன? அவற்றை எப்படித் தவிர்ப்பது?

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் சென்ற மாதம் குறைந்தது 168 பேர் விலையுயர்ந்த, பருவகால உணவுப் பொருள்களை இணையம் வழி வாங்க
முயற்சி செய்து ஏமாந்துபோனதாகச் சிங்கப்பூர்க் காவல்துறை தெரிவித்தது.

கடலுணவு, black gold musang king டுரியான்கள், செர்ரி பழங்கள், wagyu இறைச்சி ஆகிய உணவுப் பொருள்களை வாங்க அவர்கள்
முயற்சி செய்தனர்.

அதில் குறைந்தது 20,000 வெள்ளியை இழந்தனர்.

Grocery Retail, Department Store, Juewei Food, Baihui Mall, Ocean Fishery Exchange எனப்படும் போலி Facebook பக்கங்களுக்கு எதிராகப் புகார் கிடைத்ததாகக் காவல்துறை தெரிவித்தது.


இத்தகைய சம்பவங்களில் என்ன நடக்கும்?
  • மோசடிக்காரர்கள் உணவுப் பொருள்களை விற்பனை செய்வது போல் நடிப்பார்கள்
  • விலை மலிவான பொருள்களை விற்பதாக விளம்பரங்களை Facebook போன்ற இணையத்தளங்களில் பதிவு செய்வார்கள்
  • அதை வாங்க விரும்புவோர் Facebook Messenger வழி மோசடிக்காரர்களுடன் தொடர்புகொள்வார்கள்
  • உணவுப் பொருள்களை வாங்க PayNow வழி கட்டணம் செலுத்தும்படி மோசடிக்காரர் கூறுவார்
  • வாங்கிய பொருள்களைப் பெறாதபோது, அல்லது மோசடிக்காரருடன் தொடர்புகொள்ள முடியாதபோது தான் ஏமாந்துபோனதைப் பாதிக்கப்பட்டவர்கள் உணர்வார்கள்
இதை தவிர்க்க என்ன செய்யலாம்?
  •  தொலைபேசியில் ScamShield செயலியைப் பதிவிறக்கம் செய்யலாம்
  • 2FA அல்லது multifactor authentication ஆகிய பாதுகாப்பு அம்சங்களை வங்கிகள், சமூக ஊடகங்கள், Singpass கணக்கு, மின்னிலக்க வங்கிச் சேவைகள் போன்ற செயலிகளில் செயல்படுத்தலாம்
  •  மோசடிகளைப் பற்றி எச்சரிக்கும் இணையத்தளத்தை நாடலாம், அல்லது 1800-722-6688 என்ற எண்ணை அழைக்கலாம்
  • அதிகாரபூர்வ விற்பனையாளர்களிடமிருந்து மட்டும் உணவுப் பொருள்களை வாங்கலாம்
  • குறுகிய காலத்தில் கட்டணத்தைச் செலுத்த வற்புறுத்தும் விற்பனையாளர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
  • தெரியாத நபர்களின் வங்கிக் கணக்குகளுக்குப் பணம் அனுப்புவதைத் தவிர்க்க வேண்டும்
  • விற்பனையாளரின் நம்பகத்தன்மையை மற்ற வாடிக்கையாளர்களிடமிருந்து கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்
  • மோசடிகளைப் பற்றி நண்பர்கள், உறவினர்களை எச்சரிக்கலாம்
  • போலி Facebook பக்கங்களைப் பற்றி Facebook-இடம் புகார் செய்யலாம்
ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்