Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

2030ஆம் ஆண்டுக்குள் உணவுத் தேவையில் 30 விழுக்காட்டை நிறைவுசெய்யும் இலக்கை அடைவதில் சிங்கப்பூர் முன்னேற்றம்

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் சென்ற ஆண்டின் முதல் 9 மாதங்களில் உட்கொள்ளப்பட்ட முட்டைகளில் 30 விழுக்காடு, உள்ளூரில் உற்பத்தியானவை.

2030ஆம் ஆண்டுக்குள் நாட்டின் உணவுத் தேவைகளில் 30 விழுக்காட்டை உற்பத்திசெய்யும் இலக்கை அடைவதில் அது ஒரு புதிய மைல்கல்.

காய்கறிகளின் உற்பத்தி 14 விழுக்காட்டில் நிலையாக இருந்தது.

மீன் உற்பத்தி பத்திலிருந்து 9 விழுக்காட்டுக்குக் குறைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

நீடித்து நிலைத்திருக்கும் பயணத்தில் தாவரங்களை அடிப்படையாகக் கொண்ட மாற்று உணவு வகைகளும் அடங்கும்.

வழக்கமான சைவ உணவு வகைகளை வழங்கிய Growthwell நிறுவனம், தாவரங்களை அடிப்படையாகக் கொண்ட கூடுதல் உணவு வகைகளை உருவாக்கியுள்ளது.

மாறிவரும் பயனீட்டாளர்களின் விருப்பங்களைக் கொண்டு நடத்தப்பட்ட மேம்பட்ட ஆய்வை வைத்து அது அவ்வாறு செய்தது.

அசைவ உணவைச் சாப்பிடுவோரைக் குறிவைப்பதால் இறைச்சி வகைகளின் சுவையையும் தோற்றத்தையும் உருவாக்குவது முக்கியம் என்றது நிறுவனம்.

தானியக்கத்தின்வழி உற்பத்தியை அதிகரிக்கவும் நிறுவனம் முனைகிறது.

அது விலைகளைக் குறைக்க உதவும் என்றது அது.

செய்தி செயலி பல்வேறு புதிய அம்சங்களுடன் புதுப்பொலிவு பெற்றுள்ளது.  இப்போதே ‘Update’ செய்யுங்கள் அல்லது ‘Mediacorp Seithi’ செயலியைப் பதிவிறக்கம் செய்யுங்கள்! 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்